போரிஸ் ஜான்சன் இனி பிரதமராக இருக்கக்கூடாது... ஐந்து வயது குழந்தையின் தீர்ப்பு: ஒரு வைரல் வீடியோ

Viral Video UnitedKingdom BorisJohnson
By Balamanuvelan Jan 19, 2022 05:25 AM GMT
Report

பொதுமுடக்க விதிகளை மீறி பார்ட்டி கொண்டாடிய பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒரு மோசமான பிரதமர், அவர் இனி பிரதமராக இருக்கக்கூடாது என்று ஐந்து வயது குழந்தை ஒருத்தி கூறும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Leicesterஇல் வாழும் குட்டிப்பெண் Layla Somani, தன் குடும்பத்துடன் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது தொலைக்காட்சியில் செய்தியை கவனித்துக்கொண்டிருந்திருக்கிறாள்.

அப்போது, பொதுமுடக்க விதிகளை மீறி பிரதமர் இல்லத்தில் நடந்த மதுபான பார்ட்டி குறித்த செய்தியைக் கூர்ந்து கவனித்த அந்தக் குழந்தை, நாட்டு மக்கள் அதைக் குறித்து என்ன எண்ணுகிறார்களோ, அதையே தன் மழலைக் குரலில் அழுத்தம் திருத்தமாக பேசியிருக்கிறாள்.


ஒரு கைதேர்ந்த விமர்சகரைப் போல, தன் தாத்தா Kanti Somani (76) மற்றும் பாட்டி Kusun Somani (73)யிடம் அவள் பேசும் விதத்தைக் கவனித்த அவளது தாய் Devina Somani (37)ம் தந்தை Nick Somani (41)ம், அந்தக் காட்சியை அப்படியே கமெராவில் பதிவு செய்துவிட்டார்கள்.

போரிஸ் ஜான்சன் மற்றவர்கள் எல்லாரையும் வீட்டிலிருக்கச் சொல்லிவிட்டு, அவர் மட்டும் பார்ட்டிக்குச் சென்றிருக்கிறார், அதுவும் பொதுமுடக்கத்தின்போது, என்று தொடங்கும் Layla, அவர் தான் செய்த செயலுக்காக அனைவரிடமும் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்கிறாள்.

போரிஸ் ஜான்சன் இனி பிரதமராக இருக்கக்கூடாது... ஐந்து வயது குழந்தையின் தீர்ப்பு: ஒரு வைரல் வீடியோ | 5 Year Old Girl Explains Grandparents Hilarious

இனி அவர் பிரதமராக இருக்கக்கூடாது என்று சொல்லும் Layla, இனி அவர் பிரதமர் இல்லத்துக்குத் திரும்பிச் செல்லக்கூடாது என்கிறாள். ஆகவே, இனி வேறு யாராவது பிரதமராக ஆனால், நமக்கு ஒரு நல்ல பிரதமர் கிடைப்பார். போரிஸ் ஜான்சன் இனி பிரதமர் கிடையாது, அவர் ஒரு நல்ல பிரதமரும் அல்ல என நிறுத்தி நிதானமாக வார்த்தைகளை உதிர்க்கிறாள் Layla.

அவருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் ஒருவேளை அவர் மீண்டும் பிரதமராகலாம், அவருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதா என்று நாளை பார்ப்போம் என்கிறாள் Layla.

போரிஸ் ஜான்சன் இனி பிரதமராக இருக்கக்கூடாது... ஐந்து வயது குழந்தையின் தீர்ப்பு: ஒரு வைரல் வீடியோ | 5 Year Old Girl Explains Grandparents Hilarious

சிரித்துக்கொண்டே அவளது பேச்சை ரசித்த அவளது பெற்றோர், அந்த வீடியோவை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்ய, அந்த வீடியோ வைரலாகியுள்ளது. இதுவரை, 55,000 பேர் அதை பார்வையிட்டுள்ளதுடன், 1,645 ரியாக்‌ஷன்களையும் அந்த வீடியோ பெற்றுள்ளது. வீடியோவைப் பார்த்தவர்கள், எதிர்கால பிரதமர் உருவாகிவிட்டார் என Laylaவைப் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.       

போரிஸ் ஜான்சன் இனி பிரதமராக இருக்கக்கூடாது... ஐந்து வயது குழந்தையின் தீர்ப்பு: ஒரு வைரல் வீடியோ | 5 Year Old Girl Explains Grandparents Hilarious

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US