பிரித்தானியாவில் இடிந்து விழுந்த கோல்ஃப் மையத்தின் சுவர்: 5 வயது சிறுவன் நேர்ந்த பரிதாபம்
பிரித்தானியாவில் கோல்ஃப் மையத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இடிந்து விழுந்த கோல்ஃப் மையத்தின் சுவர்
லண்டனின் சிட்கப்(Sidcup) பகுதியில் அமைந்துள்ள கோல்ஃப்(Golf) மையத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
அத்துடன் 6 வயது சிறுமி ஒருவர் படுகாயமடைந்து இருப்பதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை, சிட்கப் நெடுஞ்சாலையில் உள்ள வணிக வளாகத்தில் சிறுவன் ஒருவர் காயமடைந்து இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் மற்றும் அவசர உதவிக் குழுவினர் விரைந்து சென்றனர்.
அங்கு உயிருக்கு போராடி கொண்டிருந்த சிறுவனை ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக செவ்வாய்க்கிழமை சிறுவன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டான்.
படுகாயமடைந்த சிறுமி சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |