வரப்போகும் அட்சய திருதியை.., அதிர்ஷ்ட பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்
அட்சய திருதியை என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும்.
அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.
முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும்.
அந்தவகையில், வருகிற ஏப்ரல் 30ஆம் திகதி வருகின்ற அட்சய திருதியை அன்று பல மங்களகரமான யோகங்கள் வருகின்றன.
அதாவது, லட்சுமி நாராயண யோகம், கஜகேசரி யோகம், சர்வார்த்த சித்தி யோகம் ஆகிய யோகங்கள் உருவாகின்றன.
இந்த யோகத்தால் குறிப்பிட்ட 5 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
கடகம்
அட்சய திருதியை அன்று கடக ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வெற்றியை அடைவதோடு, நீங்கள் விரும்பிய வேலையையும் பெறுவீர்கள். தங்கம், வெள்ளி, ரியல் எஸ்டேட் மற்றும் வாகன வர்த்தகர்களுக்கும் வருவாய் மற்றும் நிதி நன்மைகள் அதிகரிக்கும்.
துலாம்
அட்சய திருதியை அன்று, துலாம் ராசியினருக்கு சுப யோகம் பல நன்மைகளைத் தரும். அட்சய திருதியை அன்று துலாம் ராசியினருக்கு பணம் கைக்கு வரும். உங்கள் அழகு அதிகரிக்கும். புதிய வழியில் பணம் சம்பாதிப்பீர்கள். புதிதாக வாகனம் மற்றும் சொத்து வாங்க முயற்சிப்பீர்கள்.
மகரம்
அட்சய திருதியை அன்று, மகர ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறுவர். அட்சய திருதியை அன்று, இந்த ராசிக்கு நிதி நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் மகர ராசியினருக்கு கிடைக்கும். சனி பகவானின் விசேஷ ஆசீர்வாதங்களும் மகர ராசியினருக்கு இருக்கும். மகர ராசியினர் புதிய வருமானங்கள் மூலம் வருமானத்தை பெருக்கிக் கொள்வார்கள். புதிய தொழில் தொடங்க மகர ராசியினருக்குச் சாதகமான நேரம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு, அட்சய திருதியை அன்று நல்ல பலன் கிடைக்கும். அன்று முதல் சுப தருணங்கள் கும்ப ராசியினருக்குத் தொடங்கும். புதிய திட்டங்கள், வியாபாரத்தில் லாபம் போன்றவை நினைத்ததுபோல் கிடைக்கும். கொடுக்க வேண்டிய பணமும் கைக்கு வரும் மற்றும் பணியில் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷபராசியினர் அட்சய திருதியை அன்று பல லாபங்களைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். தொழில் துறையிலும் பல மாற்றங்கள் ஏற்படும். வங்கியில் சேமிப்புக் கணக்கு அதிகரிக்கும். அட்சய திருதியையில் முதலீடு செய்தால் அதிக லாபமும் கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |