அதிர்ஷ்டம் தரும் ஜூன் மாதம்.., பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்
ஜூன் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
அதாவது, சுக்கிரன், புதன், செவ்வாய், குரு மற்றும் சூரியன் ஆகிய கிரகங்களும் அடுத்தடுத்து தனது நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளன.
முக்கியமாக குரு பகவான் ஜூன் மாதத்தில் அஸ்தமனமாகவுள்ளார். புதன் இரண்டு முறை ராசியை மாற்றவுள்ளார்.
ஜூன் மாத கிரக பெயர்ச்சிகளால் குறிப்பிட்ட 5 ராசிக்காரர்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெறவுள்ளார்கள்.
மிதுனம்
- வேலையில் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
- தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பால், சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
- நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
- பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் நல்ல பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.
- சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
- குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- மொத்தத்தில் ஜூன் மாதம் மகிழ்ச்சியான மாதமாக இருக்கும்.
கன்னி
- வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.
- சொத்து தொடர்பான விஷயங்களில் முடிவுகள் சாதகமாக இருக்கும்.
- புதிய வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
- கையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.
- கடந்த மாதத்தை விட இம்மாதத்தில் மிகவும் நிம்மதியாக உணர்வீர்கள்.
- இருந்தாலும், நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
- முக்கியமான வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்க வேண்டும்.
துலாம்
- முன்னேற்றத்தைத் தரும் மாதமாக இருக்கும்.
- நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
- பல புதிய சாதனைகளை புரிவீர்கள்.
- பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
- வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும்.
- வெளிநாடு செல்ல வாய்ப்புக்கள் இம்மாதத்தில் கிடைக்கும்.
- தொழில் வாழ்க்கை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
தனுசு
- அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
- ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
- குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம்.
- வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.
- இம்மாதத்தில் நல்ல முன்னேற்றமும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும்.
- ரியல் எஸ்டேட் தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
கும்பம்
- நல்ல லாபத்தைத் தரும் மாதமாக இருக்கும்.
- செவ்வாய் மற்றும் கேதுவின் பார்வையால் சற்று அழுத்தம் இருக்கும்.
- இருப்பினும் குருவின் 9 ஆவது பார்வை அதிர்ஷ்டத்தை தரும்.
- உடன் வேலை செய்வோர் மற்றும் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும்.
- நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
- வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
- சுப காரியங்களுக்கு அதிகம் செலவழிக்க நேரிடும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |