கடகத்தில் நுழையும் செவ்வாய்.., கஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 5 ராசிகள்
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், செவ்வாய் பகவான் ஏப்ரல் மாதம் மூன்றாம் திகதி வியாழக்கிழமை அன்று, கடக ராசியில் நுழைகிறார்.
கடகத்தில் செவ்வாய் கிரகம் பலவீனம் ஆவதால் குறிப்பிட்ட 5 ராசிகள் துன்பங்களை பெறப்போகின்றனர்.
மேஷம்
உறவுகள் பாதிக்கப்படுவதால் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். வாகனம் சொத்து சம்பந்தமான தகராறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. திடீரென அதிகரிக்கும் செலவுகள் மன உளைச்சலை கொடுக்கும்.
கடகம்
நஷ்டத்தை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. மனச்சோர்வு ஏற்படலாம். வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சிறிய விஷயங்களுக்கு கோபப்படுவதை தவிர்க்க வேண்டும்.
துலாம்
வேலையில் தொழிலில் பிரச்சனைகளை உண்டாகும். சக பணியாளர்களால் சிக்கல்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. நிதிநிலை பாதிக்கப்படலாம். நற்பெயருக்கு களங்கம் ஏற்படலாம்.
மகரம்
குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. உடல்நல பிரச்சனைகள் வாடலாம். குறிப்பாக ரத்த அழுத்தம் அல்லது செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. எனவே கவனமாக இருக்கவும்.
கும்பம்
வீட்டில் தேவையில்லாத சண்டைகள் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடல்நல பிரச்சனைகள் மன உளைச்சலை கொடுக்கும். ரத்த அழுத்தம், போன்ற பிரச்சனைகளை அதிகம் சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலகத்திலும் சாதகமான நிலை இருக்காது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |