நாடுகடத்தப்பட்ட 50 புகலிடக்கோரிக்கையாளர்கள் மீண்டும் பிரித்தானியாவில்...
பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட 50 புகலிடக்கோரிக்கையாளர்கள் மீண்டும் பிரித்தானியாவுக்கே திரும்பிவிட்டுள்ளார்கள்.
One in, one out ஒப்பந்தத்தின் கீழ் பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட முதல் புகலிடக்கோரிக்கையாளர் பிரித்தானியாவிலிருப்பதை பிரித்தானிய ஊடகம் ஒன்று கண்டறிந்தது.

அதைத் தொடர்ந்து அவர் மீண்டும் பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்டார்.
அப்படியானால், அவரைப்போலவே எத்தனை பேர் மீண்டும் பிரித்தானியா திரும்பியிருப்பார்கள் என்னும் கேள்வி அப்போது எழுந்தது. ஆனால், அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை!
50 புகலிடக்கோரிக்கையாளர்கள்
இந்நிலையில், One in, one out ஒப்பந்தத்தின் கீழ் பிரித்தானியாவால் பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட சுமார் 50 புகலிடக்கோரிக்கையாளர்கள் மீண்டும் பிரித்தானியா திரும்பிவிட்டதாக தி கார்டியன் பத்திரிகை தற்போது தெரிவித்துள்ளது.

அப்படி பிரித்தானியா திரும்பியவர்களில் சிலர் உள்துறை அலுவலகத்தால் கைது செய்யப்பட்டாலும், அவர்களைப்போலவே மீண்டும் பிரித்தானியா திரும்பிய மேலும் பலர் பிரித்தானியாவில் இருக்கலாம் என நம்பப்படுகிறது.
உள்துறை அலுவகத் தரவுகளின்படி, one in one out திட்டத்தின் கீழ், 2026 ஜூன் 30ஆம் திகதி நிலவரப்படி, 1,117 பேர் பிரான்சிலிருந்து பிரித்தானியா வந்தடைந்துள்ளார்கள், 1,087 பேர் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |