ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு பேட்டரி மாற்றினால் 50 சதவீதம் தள்ளுபடி
ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடியில் பேட்டரி மாற்றித் தரப்படும் என்று சியோமி (Xiaomi) நிறுவனம் அறிவித்துள்ளது.
Battery Replacement
Xiaomi நிறுவனம் பராமரிப்பு மற்றும் இணைப்பு சேவை வாரத்தின் ஒரு பகுதியாக இந்திய வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட கால Battery மாற்று சலுகையை அறிவித்துள்ளது.
இந்த வாரத்தின் எஞ்சிய நாட்களில் பல்வேறு Xiaomi மற்றும் Redmi Smartphone-களில் Battery மாற்றுகளுக்கு தள்ளுபடியை வழங்குகிறது.
பயனர்கள் தங்கள் சாதனங்களை இலவசமாக சுத்தம் செய்தல் மற்றும் கிருமி நீக்கம் செய்தல் ஆகிய பலன்களையும் பெறலாம்.
முக்கியமாக பல்வேறு வகையான Xiaomi மற்றும் Redmi ஸ்மார்ட்போன்களுக்கு பேட்டரி மாற்றுதலில் 50 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்குகிறது.
இந்த சலுகையை ஆகஸ்ட் 25 முதல் ஆகஸ்ட் 30 வரை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பழைய ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துபவர்களுக்கு அல்லது battery drain மற்றும் மெதுவாக சார்ஜ் செய்வது போன்ற சிக்கல்களை எதிர்கொள்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். அத்தகைய பயனர்கள் குறைந்த செலவில் தங்கள் பேட்டரியை மாற்றிக்கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |