SBI FD: ரூ.50,000 முதலீடு.., முதிர்வு காலத்தில் எவ்வளவு பணம் கிடைக்கும்?
வாடிக்கையாளர்கள் மற்றும் கிளைகளின் எண்ணிக்கையில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ உள்ளது.
பல்வேறு கால அளவுகளில் நிலையான வைப்புத் தொகை (FD) திட்டங்களை SBI வழங்கி வருகிறது.
SBIயில் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை FDயில் முதலீடு செய்யலாம்.

இந்நிலையில், 180 முதல் 210 நாட்கள் வரையிலான FDக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 5.65% வட்டி வழங்கப்படுகிறது.
60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இதே காலத்துக்கு 6.15% வட்டி வழங்கப்படுகிறது. இவர்களுக்கு பொது வாடிக்கையாளர்களை விட 0.50% கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது.
80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு 6.25% வட்டி கிடைக்கிறது. இவர்களுக்கு கூடுதலாக 0.10% வட்டி வழங்கப்படுகிறது.

உதாரணமாக, பொது வாடிக்கையாளர் ஒருவர் ரூ.50,000ஐ 180 நாட்களுக்கு 5.65% வட்டியில் முதலீடு செய்தால், சுமார் ரூ.1,397 வட்டி கிடைக்கும். இதன் மூலம் முதிர்வுத் தொகை சுமார் ரூ.51,397 ஆக இருக்கும்.
60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் ரூ.50,000ஐ 180 நாட்களுக்கு முதலீடு செய்தால், 6.15% வட்டி விகிதத்தின் அடிப்படையில் பொது வாடிக்கையாளர்களை விட சற்று அதிக வருமானம் கிடைக்கும்.
வங்கியின் கணக்கீட்டு முறை மற்றும் FD வகையைப் பொறுத்து இறுதியாக கிடைக்கும் வட்டித் தொகையில் சிறிய மாற்றம் இருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |