நாம் தமிழர் கட்சியில் இருந்து 500 நிர்வாகிகள் விலகல்.., சீமானுக்கு தொடரும் நெருக்கடி
நாம் தமிழர் கட்சியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்ட 500 நிர்வாகிகள் பேர் விலகியது சீமானுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
500 நிர்வாகிகள் விலகல்
கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் விலகி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர்.
அதேபோல, விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகினார். அப்போது அவர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மேலும், நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் கட்சியில் இருந்து விலகினார்.
அப்போது அவர் கூறுகையில், "கட்சியில் இருக்கும் நீங்கள் யாரும் கேள்வி கேட்க கூடாது. என்னுடைய இஷ்டப்படி தான் செயல்படுவேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள்" என்று சீமான் பேசியதாக கூறி வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 500 பேர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.
பின்னர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில், "கொடி நட்டு, மேடை அமைப்பதில் இருந்து கட்சிக்காக அனைத்து வேலைகளையும் செய்கிற எங்களை சீமான் எச்சில் என்கிறார்.
புதியதாக வந்தவர்களை கொண்டாடுகிறார். இதனால், நாம் தமிழர் கட்சியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்ட 500 உறுப்பினர்கள், ஒன்றிய, மாவட்டப் பொறுப்பாளர்கள் 20 பேர் விலகுகிறோம்" என்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |