மொத்தம் 9 படகுகள், 492 புலம்பெயர்ந்தவர்கள்: அதிகரிக்கும் கால்வாயை கடப்பவர்கள் எண்ணிக்கை
கிட்டத்தட்ட 500 புலம்பெயர்ந்தவர்கள் சனிக்கிழமை சிறிய படகுகள் மூலம் ஆங்கில கால்வாயை கடந்துள்ளனர்.
அதிகரிக்கும் புலம்பெயர்ந்தவர்கள் வருகை
கடந்த வாரத்தில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் வருகைக்கு பிறகு சமீபத்திய புள்ளிவிவரப்படி சனிக்கிழமை சுமார் 9 சிறிய படகுகளில் 492 புலம்பெயர்ந்தவர்கள் ஆங்கில கால்வாயை கடந்துள்ளனர்.
புதன்கிழமை 107 புலம்பெயர்ந்தவர்கள், திங்கட்கிழமை 125 பேர், கடைசி ஞாயிற்றுக்கிழமை 703 பேர் என கடந்த 7 நாட்களில் மட்டும் 1,427 பேர் கால்வாயை கடந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த காலகட்டத்தில் அமைதியான காற்று மற்றும் பருவநிலை காணப்படுவதால் புலம்பெயர்ந்தோர் வருகைக்கு சாதகமாக அமைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை Ipsos வெளியிட்ட கருத்து கணிப்பு படி, 2016க்கு பிறகு பிரித்தானியர்களின் முக்கியமான பிரச்சனையாக புலம்பெயர்தல் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த பிரச்சனையை எதிர்கொள்ள புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தொழிற்கட்சி அரசாங்கம், புதிய எல்லைப் பாதுகாப்பு படைகளை உருவாக்குவதன் மூலம் புலம்பெயர்ந்தவர்களை ஏற்றி வரும் கும்பலை தடுக்க முடியும் என உறுதியளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |