மதுரையில் பிரபல நகைக்கடையில் 500 சவரன் நகை கொள்ளை
500 sovergians gold theft at madurai tanishq showroom: மதுரையில் சமீபத்தில் திறக்கப்பட்ட Tanishq நகைக்கடையில் 500 சவரன் நகை கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.
மதுரை நகைக்கடையில் 500 சவரன் நகை கொள்ளை
மதுரை மாவட்டம் காளவாசல் பகுதியில், சமீபத்தில் டாடா நிறுவனத்திற்கு சொந்தமான Tanishq நகைக்கடை சமீபத்தில் திறக்கப்பட்டது.

ஊழியர்கள் நேற்று இரவு கடையை மூடிவிட்டு சென்ற நிலையில், இன்று காலை வழக்கம் போல் கடையை திறந்து பார்த்த போது, 500 சவரன் நகை மாயமாகியுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து, உடனடியாக எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை காவல் ஆணையர் ராஜேந்திரன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மேலும், நகைக்கடை மற்றும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அதிகாலை 3 மணிக்கு கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
விசாரணைக்கு பின்னரே கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு தெரிய வரும் என ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.