500-லிருந்து 501வது விக்கெட்டுக்குள் நிறைய நடந்துவிட்டது: அஸ்வின் மனைவி உணர்ச்சிகரமான இன்ஸ்டாகிராம் பதிவு
இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 500 டெஸ்ட் விக்கெட்டில் இருந்து 501வது டெஸ்ட் விக்கெட் எடுப்பதற்குள் நிறைய நடந்துவிட்டது என்று அவரது மனைவி ப்ரீத்தி இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
போட்டியில் இருந்து விலகிய அஸ்வின்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது தீவிரமாக நடைபெற்றது.
இதில், ராஜ்கோட்டில் நடைபெற்ற 3வது போட்டியின் 2வது நாளில், இந்திய அணிக்காக விளையாடிய தமிழக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் குடும்ப அவசர நிலை காரணமாக போட்டியில் இருந்து திடீரென விலகினார்.
குடும்ப அவசர நிலை காரணமாக விலகியதாக சொல்லப்பட்ட நிலையில், 48 மணி நேரங்களுக்கு பிறகு 3வது டெஸ்ட் போட்டியின் 4வது நாளில் அஸ்வின் மீண்டும் இந்திய அணியில் இணைந்தார்.
இந்த போட்டியின் 2வது நாளில் இங்கிலாந்து அணியின் ஜாக் கிராலி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்(Ravichandran Ashwin) டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்வின் மனைவி ப்ரீத்தி-யின் இன்ஸ்டாகிராம் பதிவு
இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் 500 டெஸ்ட் விக்கெட்டில் இருந்து 501வது டெஸ்ட் விக்கெட் எடுப்பதற்கு இடையே நடந்த கதையை அவரது மனைவி ப்ரீத்தி நாராயணன் இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிகரமான பதிவின் மூலம் பகிர்ந்துள்ளார்.
அதில், “500வது விக்கெட்டை எடுக்க ஹைதராபாத்தில் துரத்தினோம், ஆனால் அது நடக்கவில்லை. விசாகப்பட்டினத்தில் அது நடக்கவில்லை. எனவே வாங்கிய டன் கணக்கான இனிப்புகளை 499வது விக்கெட்டின் போதே வீட்டில் இருந்த அனைவருக்கும் வழங்கினோம்”. “500வது விக்கெட் வந்து அமைதியாக சென்றுவிட்டது.
500 முதல் 501 வரை நிறைய விஷயங்கள் நடந்தன, அந்த 48 மணி நேரங்கள் மிக நீண்டதாக இருந்தது. “ஆனால் இது 500வது விக்கெட் பற்றியது, 499வது விக்கெட்டிற்கு முன்னால் உள்ளது. என்னவொரு மகத்தான சாதனை. என்னவொரு மகத்தான மனிதர். நான் மிகவும் பெருமையாக உணர்கிறேன் அஸ்வின், நாங்கள் உன்னை விரும்புகிறோம்” என பதிவிட்டுள்ளார்.
ப்ரீத்தி பதிவிற்கு கிடைத்த வரவேற்பு மிகவும் அபரிமிதமானது. ரசிகர்கள் அஸ்வினின் அர்ப்பணிப்பையும் ப்ரீத்தியின் பலத்தையும் பாராட்டினர், பலர் தங்களின் சொந்த சவால்களை எதிர்கொண்ட கதைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |