Bank -லிருந்து நாள் ஒன்றுக்கு ரூ.5,000 உங்கள் கணக்கிற்கு வரும்? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
உங்களது ஆவணங்களை வங்கிகள் 30 நாட்களுக்குள் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால், ஒரு நாளைக்கு ரூ.5,000 வீதம் உங்களுக்கு தர வேண்டும்.
வங்கிகள் மீது புகார்
இந்தியா முழுவதும் இயங்கும் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத இதர நிதி நிறுவனங்கள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கி வருகிறது. குறிப்பாக, வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன்களுக்கு சில கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.
அதில் முக்கியமாக, வங்கியில் கொடுக்கப்படும் வீட்டுக்கடனும் ஒன்று. இந்நிலையில், வீட்டுக் கடன் வழங்கப்படும் சில வங்கிகளில், கடன் பெற்றவரின் அசல் ஆவணங்களை திரும்ப வழங்க மறுப்பதாக புகார் எழுந்தது.
ஒரு நாளைக்கு ரூ.5,000
இந்த புகாரின் அடிப்படையில், ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத இதர நிதி நிறுவனங்கள் அனைத்தும் வீட்டுக் கடன்கள் முடிந்தவுடன் 30 நாள்களுக்குள், கடன் பெற்றவரின் அசல் ஆவணங்களை திருப்பிக் கொடுக்க வேண்டும்.
அப்படி, வங்கிகள் கொடுக்க தவறும் பட்சத்தில், கடன் பெற்றவருக்கு ஒரு நாளைக்கு ரூ.5,000 வீதம் வழங்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், அசல் ஆவணங்கள் சேதமடைந்தாலோ, தொலைந்தாலோ அதற்கும் ஒரு நாளைக்கு ரூ.5,000 வீதம் வழங்க வேண்டும். இதில், ஆவணங்கள் சேதமடைந்திருந்தால் வங்கிகளுக்கு 30 நாள்கள் கூடுதலாக வழங்கப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |