பிரித்தானியாவில் 5,000 வருட பழமையான மனித எலும்பு கூடு கண்டுபிடிப்பு! அதிர வைக்கும் தகவல்கள்
இங்கிலாந்து நாட்டில் சுமார் 5000 வருடம் பழமையான எலும்பு கூடு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து சில அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தில் வசித்து வருபவர் Simon Hunt. இவர் Graphic Designer ஆக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் Thames நதியில் தனது படகில் தனியாக பயணம் செய்தார்.
அப்போது நதியின் கரையில் ஆழம் குறைந்த பகுதியில் கருப்பு நிறத்தில் வித்தியாசமான கட்டை போன்று ஒன்று தென்பட்டுள்ளது. இதையடுத்து Simon Hunt அந்த பொருளை எடுத்துப்பார்த்த போது அது ஒரு எலும்பு என்பதை கண்டறிந்தார்.
பின்னர் உடனே இதனை குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ், அவரிடம் இருந்த எலும்பு கூடை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அந்த எலும்பு ஒரு மனிதனின் எலும்பு போன்று இருந்ததால் அதை பரிசோதனை செய்ய ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட அந்த எலும்பு சுமார் 5,000 பழமையானது என்பது தெரியவந்துள்ளது.
இந்த எலும்பை உடையவர் 5 அடி 7 இன்ச் உயரம் கொண்டவராக இருக்கலாம் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் நதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட எலும்பு குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.