பிரித்தானியாவில் 50,000 செவிலியர்கள் நாட்டை விட்டு வெளியேற திட்டம்
ஒரு காலத்தில், ஒரு குடும்பத்தில், ஒரு தந்தை அல்லது தாய் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்வார். அவரை நம்பி ஒரு குடும்பம் அவரது சொந்த நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும்.
அவர் எப்போதாவது விடுமுறைக்கு ஊருக்கு வருவார். வாழ்வின் பெரும் பகுதி முழுவதும் கணவனும் மனைவியும், அல்லது, தந்தை அல்லது தாயும் பிள்ளைகளும் வெவ்வேறு நாடுகளில் பிரிந்தே வாழ்வார்கள்.

ஒரு கட்டத்தில், சில நாடுகள், பணி செய்யும் நபரின் குடும்பத்தினரும் அவருடன் வந்து வாழ அனுமதியளிக்கத் துவங்கின.
ஆனால், அந்த நிலை மீண்டும் மாறிவருகிறது. பிரித்தானியா முதலான சில நாடுகள், தங்கள் நாடுகளில் பணி செய்வோர் அவர்களுடைய குடும்பத்தினரையும் தங்களுடன் அழைத்துக்கொள்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கத் துவங்கியுள்ளன.
ஆக, பழைய காலம் போலவே, வெளிநாடுகளில் வேலை செய்வோர் தங்கள் குடும்பத்தினரை பிரிந்து வாழும் ஒரு நிலை மீண்டும் ஏற்படும் அபாயம் உருவாகிவருகிறது.

50,000 செவிலியர்கள் நாட்டை விட்டு வெளியேற திட்டம்
அதேபோன்ற கட்டுப்பாடுகளைத்தான் பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத் மீண்டும் பிரித்தானியாவில் அறிமுகம் செய்ய முயன்று வருகிறார்.
ஆக, பிரித்தானியாவில் வேலை செய்வோர், தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கிடைப்பதற்கே 10 முதல் 15 ஆண்டுகள் ஆகலாம் என்னும் நிலைமை ஏற்படும்போது, தங்கள் குடும்பத்தினரை எப்படி தங்களுடன் அழைத்துக்கொள்வார்கள்?
ஆக, குடும்பத்துக்காகத்தான் உழைக்கிறோம், மீண்டும் குடும்பத்தைப் பிரிந்து தனியாக வேறொரு நாட்டில் வாழ்வேண்டுமா என யோசிக்கத் துவங்கியுள்ளார்கள் பலரும்.
அதன் காரணமாக, பிரித்தானியாவைப் பொருத்தவரை, குறிப்பாக செவிலியர்களில் 50,000 பேர் வரை பிரித்தானியாவை விட்டு வெளியேற திட்டமிட்டுவருவதாக துறைசார் மூத்த அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள்.
விடயம் என்னவென்றால், பிரித்தானியாவில் மருத்துவம், முதியோரை கவனித்துக்கொள்தல் போன்ற வேலைகளில் அதிகம் ஈடுபடுவது வெளிநாட்டவர்கள்.

ஆக, 50,000 செவிலியர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறினால் மருத்துவமனைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்கிறார்கள் துறை சார்ந்தவர்கள்.
ஆனாலும், இப்போது உள்துறைச் செயலரான ஷபானா சிறந்த திட்டங்களை முன்வைத்து வருகிறார். அவை அடுத்த 50 ஆண்டுகளுக்கு புலம்பெயர்தலில் நல்ல பலனைத்தரும். சட்டம் ஒழுங்கை சீர் செய்வதற்காக எடுத்துவரும் நடவடிக்கைகளுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருக்கமுடியாது என்கிறார் உள்துறை அலுவலக செய்தித்தொடர்பாளர் ஒருவர்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |