கனடாவில் ஒரு வீட்டில் இருந்து தடைசெய்யப்பட்ட 5 லட்சம் சிகரெட்கள் பறிமுதல்! புகைப்படத்துடன் முக்கிய தகவல்
கனடாவில் தடை செய்யப்பட்ட சிகரெட் பிராண்டுகள் கட்டுகட்டாக ஒரு வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
வின்னிபெக்கில் உள்ள வீட்டில் இருந்து தான் 53க்கும் அதிகமான சிகரெட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். அதாவது இது தடை செய்யப்பட்ட 530,587 சிகரெட்டுகளுக்கு சமமாகும்.
இது தொடர்பாக கேல்கிரியை சேர்ந்த 52 வயதான நபரையும், வின்னிபெக்கை சேர்ந்த 46 வயதான நபரையும் பொலிசார் கைது செய்தனர். சிகரெட் பொட்டிகளை இறக்கி வைக்கும் போதே அவர்கள் பிடிபட்டனர். பின்னர் அவர்கள் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்த கடத்தல் பொருட்கள் $159,176 வரி வருவாய் இழப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மனிடோபாவின் புகையிலை வரிச் சட்டம், வரி நிர்வாகம் மற்றும் இதர வரிகள் சட்டம் மற்றும் கனடாவின் குற்றவியல் கோட் ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.
மாகாண வரிச் சட்டங்களின் கீழ் முதல் முறை குற்றத்திற்காக குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு $ 1,000 முதல் $ 10,000 வரை அபராதம் மற்றும் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இச்சம்பவத்தின் போது, சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் பிளேஃபேர் ஃபுல் ஃப்ளேவர், கனடியன் கிளாசிக்ஸ், நெக்ஸஸ் லைட், கனடியன் கூஸ் மற்றும் கனடியன் கரி உள்ளிட்ட பல சிகரெட் பிராண்டுகளை கைப்பற்றினர். இந்த பிராண்டுகள் கனடாவில் சட்டவிரோதமாக கருதப்படுகின்றன.