பாகிஸ்தானுக்கு 508 ஓட்டங்கள் வெற்றி இலக்கு! இலங்கையின் தாறுமாறான ஆட்டம்
காலே இரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தானுக்கு 508 ஓட்டங்கள் வெற்றி இலக்கை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.
இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் இன்று நடந்தது.
இலங்கை அணி 176 ஓட்டங்களுடன் நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. திமுத் கருணரத்னே, தனஞ்சய டி சில்வா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அணியின் ஸ்கோர் 243 ஆக இருந்தபோது, இலங்கை கேப்டன் கருணரத்னே 61 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து துனித் வெல்லலகே 18 ஓட்டங்களில் நவாஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
asfeworld.tv
எனினும் நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடிய தனஞ்சய டி சில்வா 109 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ரமேஷ் மெண்டிஸ் அதிரடியாக 54 பந்துகளில் 45 ஓட்டங்கள் எடுத்து களத்தில் நின்றார்.
இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 360 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. ஏற்கனவே 147 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்தால், பாகிஸ்தான் அணிக்கு 508 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி களமிறங்கியது.அந்த அணியின் தொடக்க வீரர் அப்துல்லா ஷாபிக் 16 ஓட்டங்களில் பிரபத் ஜெயசூர்யா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நான்காவது நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது.
cigened
பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 89 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இமாம் உல் ஹக் 46 ஓட்டங்களுடனும், கேப்டன் பாபர் அசாம் 26 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
கடைசி நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றிக்கு 419 ஓட்டங்கள் தேவை என்பதால், இலங்கை அணி விக்கெட்டுகளை வீழ்த்தும்பட்சத்தில் அபார வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
PC: AFP