பிரான்சில் மூன்று மாதங்களில் 520,000 பேர் ராஜினாமா: அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவல்
பிரான்சில் 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 520,000 பேர் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளார்கள்.
2008ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலுக்குப் பிறகு, இதுதான் பிரான்சில் குறுகிய காலத்தில் ராஜினாமா செய்தவர்களின் அதிக எண்ணிக்கையாகும்.
நிறுவனங்கள் பணியிடங்களை நிரப்ப படாட பாடு பட்டுக்கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், பிரான்சில் 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 520,000 பேர் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி துவங்கி மார்ச் வரையிலான காலகட்டத்தில் இப்படி வேலையை விட்டவர்களில் 470,000 பேர் நிரந்தர வேலையில் இருந்தவர்கள் என்பது குறிபிடத்தக்கது.
2008இல் இதே காலகட்டத்தில் 510,000 பேர் தங்கள் வேலையை ராஜினாமா செய்தார்கள்.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
நிறுவனங்கள் பணியாளர் தட்டுப்பாட்டால் திணறிக்கொண்டிருக்கும் சூழல், புதிய வேலைகளுக்கு வாய்ப்பை உருவாக்கித் தருவதால், கூடுதலாக பலர் வேலையை ராஜினாமா செய்துள்ளனர்.
அத்துடன், புதிதாக ஒரு இடத்தில் வேலைக்கு சேரும்போது பணியாளர்கள் கூடுதல் ஊதியம் கேட்கவும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஏற்கனவே நிறுவனங்களில் கடுமையான பணியாளர் தட்டுப்பாடு காணப்படுவதால், புதிதாக வேலக்கு வருவோரின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வேலை வழங்கும் ஒரு நிலை பணி வழங்குவோருக்கு உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.