ஐந்து மணி நேரத்திற்குள் 53 விபத்துக்கள்... அவசியமானால் மட்டும் பயணம் செய்ய இங்கிலாந்து வாகன ஓட்டிகளுக்கு வலியுறுத்தல்
இங்கிலாந்திலுள்ள சில பகுதிகளில், நேற்றிரவு ஐந்து மணி நேரத்திற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட விபத்துக்கள் குறித்து பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசியமானால் மட்டும் பயணம் செய்ய வாகன ஓட்டிகளுக்கு வலியுறுத்தல்
Avon மற்றும் Somerset பகுதிகளில், மோசமான வானிலை காரணமாக, நேற்று இரவு ஐந்து மணி நேரத்திற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட விபத்துக்கள் குறித்து புகார்கள் வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
Pic: Amii Natasha Wills
இரவு 6.00 மணியிலிருந்து 11.00 மணி வரையில் மட்டுமே 53 விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் ஏழு விபத்துக்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளன.
இது குறித்து பேசிய பொலிஸ் அதிகாரியான Mark Runacres, மோசமான வானிலை காரணமாக கடந்த 12 மணி நேரத்தில் அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடந்துள்ளன.
ஆகவே, அவசியமானால் மட்டுமே பயணம் செய்யுமாறும், மிகவும் கவனமாக, கூடுதல் நேரமெடுத்து பயணிக்குமாறும் மக்களைக் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.