வயது மீறிய காதல்! 30 வயது இளைய பெண்ணை திருமணம் செய்த 54 வயது தொழிலாளி
தமிழக மாவட்டம் சேலத்தில் 24 வயது பெண்ணும், 54 வயது நபரும் திருமணம் செய்துகொண்டு பாதுகாப்பு கேட்டு காவல்நிலையம் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிக வயது வித்தியாசத்தில் காதல்
சேலம் மாவட்டம் மாட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (54). விசைத்தறி தொழிலாளியான இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தன் மனைவியை பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது.
அதே பகுதியைச் சேர்ந்த விமலா என்ற 24 வயது பட்டதாரி பெண்ணுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
விமலா அடிக்கடி கிருஷ்ணன் வீட்டிற்கு சென்று வந்த நிலையில் இருவரும் வயதை மறந்து காதலிக்க தொடங்கியுள்ளனர்.
வீட்டைவிட்டு வெளியேறி திருமணம்
இந்த நிலையில் கிருஷ்ணனும், விமலாவும் திருவண்ணாமலைக்கு சென்று திருமணம் செய்துகொண்டுள்ளனர். அதன் பின்னர் பெண்ணின் வீட்டிற்கு இது தெரிய வந்ததைத் தொடர்ந்து, பெண்ணின் தந்தை கிருஷ்ணன் தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக புகார் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் காதல் ஜோடியை தேடி வந்துள்ளனர். இதனை அறிந்த திருமண ஜோடி காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்துள்ளனர்.
பெற்றோருடன் செல்ல மறுத்த இளம்பெண் உடனே விமலாவின் குடும்பத்தினரும் காவல் நிலையம் சென்றுள்ளனர். மகளை உடன் வருமாறு பெற்றோர் மற்றும் உறவினர்கள் அழைத்துள்ளனர்.
ஆனால் விமலா அவர்களுடன் வர மறுத்துள்ளார். பொலிஸாரும் திருமணம் செய்துகொண்ட பெண் திருமண வயதை எட்டியவர் என்பதால், அவருடைய விருப்பப்படி கணவருடன் செல்லலாம் எனக் கூறி இருவரையும் அனுப்பி வைத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |