பிரான்சில் 55 வயது கீழ் உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படாது! ஏன்? அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிரான்சில் 55 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போடப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பிரான்சில் தடுப்பூசி போடும் பணி, தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக 55 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அரசால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது 55 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு AstraZeneca தடுப்பூசி போடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதார அமைச்சர் Olivier Véran கூறுகையில், AstraZeneca தடுப்பூசி தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த தடுப்பூசிகளை 55 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு போடப்பட மாட்டாது என சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசி மீது நாளங்களில் இரத்தம் உறைதல் எனும் நோய் ஏற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
ஆனால், இது மிக அரிதான ஒன்று என பிரான்ஸ் மருந்துகள் ஸ்தாபனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.