நம்பமுடியாத வகையில் மிக குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்! முகேஷ் அம்பானி அதிரடி
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது 5ஜி செல்போனை மிக குறைந்த விலைக்கு அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி 5ஜி அலைக்கற்றை ஒரு நல்ல வரம்பை அடைந்தவுடன், ரூ.8,000 முதல் ரூ.12,000 மதிப்புள்ள ஸ்மார்ட்போனை விற்பனை செய்யும் என கூறப்படுகிறது.
தி கௌண்டர்பாயிண்ட் ரிசர்ஜ் நடத்திய ஆய்வில் கிடைத்திருக்கும் தகவலின்படி, லட்சக்கணக்கான 2ஜி வசதிகொண்ட ஸ்மார்ட்ஃபோன் பயனர்களை கூகுளுடன் இணைந்து உருவாக்கிய ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போன் மூலம் 4ஜி நெட்வொர்க்கிற்கு ஈர்த்து, ஏற்கனவே ஜியோ நிறுவனம் செய்த அதே உத்தியை தற்போதும் கையிலெடுக்கப் போகிறதாகக் கூறப்படுகிறது.
keralakaumudi
ஜியோவின் வளர்ச்சிக்கு இருமுனை உத்தி மிகமுக்கிய பங்கு வகிப்பதாக இருக்கும் வகையில் இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
swarajyamag