ரூ.15,000 -க்கும் குறைவான விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்: பட்டியல் உள்ளே
இந்திய சந்தையில் ரூ.15,000 -க்கும் குறைவான விலையில் உள்ள 5ஜி ஸ்மார்ட்போன்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
5ஜி ஸ்மார்ட்போன்கள்
தற்போதைய காலத்தில் சிறுவர்கள் ஆரம்பித்து பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போன் இல்லாத நிலை இல்லை. பேசுவதில் ஆரம்பித்து, ஒன்லைனில் பணம் அனுப்புவது மற்றும் வீட்டில் இருந்தே அனைத்து பில்லையும் கட்டுவது உள்பட பல தேவைகளுக்கு ஸ்மார்ட்போன் பயன்பட்டு வருகிறது.
செல்போனை நாம் பயன்படுத்தும் காலம் போய், செல்போன் நம்மை பயன்படுத்துகிறது என்றே சொல்லலாம். சுருக்கமாக உலகமே கைக்குள் வந்துவிட்டது என்று கூட சொல்லலாம்.
அந்தவகையில், இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகமாகி ஓராண்டு காலம் ஆகிறது. அதற்கான, குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன்களை பற்றி பார்க்கலாம்.
லாவா பிளேஸ் புரோ 5ஜி
இந்தியாவில் கடந்த மாதம் லாவா பிளேஸ் புரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமானது. இது, 6.78 இன்ச் ஃபுள் ஹெச்டி+ டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், மீடியாடெக் டிமன்சிட்டி 6020 சிப்செட், 8ஜிபி ரேம் (8GB RAM), 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் (128GB internal storage) , 5,000mAh பேட்டரி, டைப் சி சார்ஜிங் போர்ட், 33 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட் மற்றும் 50 மெகாபிக்சல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த போனின் விலை ரூ.12,499 ஆகும்.
சாம்சங் கேலக்சி எம்14 5ஜி
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் சாம்சங் கேலக்சி எம்14 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது. இது, 6.6 இன்ச் பிஎல்எஸ் எல்சிடி டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்டி+ ரெசல்யூஷன், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், சாம்சங்கின் Exynos 1330 ப்ராசஸர், 50+2+2 மெகாபிக்சல் என பின்பக்க மூன்று கேமரா, 13 மெகாபிக்சல் முன்பக்க கேமரா, 6,000mAh பேட்டரி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 4ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனையாகிறது. இந்திய சந்தையில் இந்த போனின் விலை ரூ.11,990 முதல் தொடங்குகிறது.
ரெட்மி 12 5ஜி
இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமானது. இது 6.79 இன்ச் திரை அளவு கொண்ட டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 4 ஜெனரேஷன் 2 சிப்செட். 4 ஜிபி ரேம் + 128 ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த போனின் விலையானது ரூ.11,999 முதல் தொடங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |