2000 ஆண்டுகளுக்கு முந்தைய பாலியல் பொம்மை: பயன்பாடு குறித்து தொடரும் மர்மம்!
பிரித்தானியாவின் விண்டோலண்டாவின் ரோமானிய கோட்டையில் இருந்து 2000 ஆண்டுகளுக்கு முந்தைய விசித்திரமான மரப்பொருள் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
6.3 அங்குல மரப் பொருள்
2000 ஆண்டுகளுக்கு முந்தைய 6.3 அங்குல மரப் பொருள் ஒன்று பிரித்தானியாவின் விண்டோலண்டா(Vindolanda) ரோமானிய கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய காலத்தில் பாலியல் இன்பத்திற்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோமானிய கோட்டையில் இருந்து 6.3 அங்குல நீளமுள்ள மரப் பொருள், டஜன் கணக்கான காலணிகள் மற்றும் ஆடை அணிகலன்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது, இது முதலில் தாக்குதல் கருவியாக இருக்கும் என்று கருதப்பட்டது.
Alamy
ஆனால் நடத்தப்பட்ட புதிய ஆய்வின் அடிப்படையில், அதன் உயிர் போன்ற அளவைக் கருத்தில் கொண்டு, இது ஒரு பாலியல் கருவியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
மேலும் பொருளின் இரு முனையும் குறிப்பிடத்தக்க வகையில் மென்மையானவை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Vindolanda Trust
பிரித்தானியாவின் பழமையான உதாரணம்
நடத்தப்பட்ட புதிய ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவரான டாக்டர் ராப் காலின்ஸ் MailOnline இடம் பேசிய போது, கண்டுபிடிக்கப்பட்ட பொருள் செக்ஸ் பொம்மை என்றால், அது பிரித்தானியாவின் பழமையான உதாரணம் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தார்.
ஆனால் அளவு மற்றும் அது மரத்தால் செதுக்கப்பட்டது என்பதால் அதன் பயன்பாட்டில் பல கேள்விகளை எழுப்புகிறது. மரப் பொருளின் நோக்கம் குறித்து இன்னும் நம்மால் உறுதியாக இருக்க முடியாது.
Vindolanda Trust
அழகுசாதனப் பொருட்கள் அல்லது மருந்துகளுக்கான பொருட்களை அரைக்க போன்ற பிற நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மரப் பொருள் தற்போது நார்தம்பர்லேண்டில் உள்ள விண்டோலண்டா அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும் என தெரியவந்துள்ளது.
Vindolanda Trust