இந்தியா-அமெரிக்கா உறவில் ஏற்பட்டுள்ள 6 மோசமான வரலாற்று தருணங்கள்!
இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு மிகவும் ஆழமானதாக பார்க்கப்படுகிறது, குறிப்பாக பயங்கரவாதம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இன்றைய இந்தியா-அமெரிக்கா உறவு கூடுதல் வலுவடைந்துள்ளது என்றே சொல்லலாம்.
இருப்பினும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வரலாறு பல்வேறு கருத்து வேறுபாடுகளாலும், தவறான பிரிதல்களாலும் மோசமடைந்த காலங்களும் உள்ளன.
அவ்வாறு வரலாற்றில் இந்தியா-அமெரிக்க உறவில் ஏற்பட்ட மோசமான 6 நிகழ்வுகளும் உள்ளன.
மோடி vs டிரம்ப் இடையிலான வர்த்தக சமீபத்திய வர்த்தக மோதல்
ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்பாக இந்தியா மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த புதிய வரிக் கொள்கை இருநாடுகளுக்கு இடையிலான உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தி வருகிறது.
டிரம்பின் இந்த புதிய வரி கொள்கைக்கு இந்தியா முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதோடு, புதிய வரி கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் மறுத்துள்ளது.
இதையடுத்து ஏற்கனவே விதிக்கப்பட்ட 25% வரி விதிப்புடன் கூடுதலாக 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்து இருப்பது நிலைமை மேலும் மோசமடைய வைத்துள்ளது.
1949 இந்திய பிரதமர் நேருவின் அமெரிக்கப் பயணம்
சுதந்திரம் பெற்ற தொடக்கத்தில் இந்தியா-அமெரிக்கா உறவு அவ்வளவு சிறப்பானதாக இல்லை, நேருவின் அந்நாட்டு பொதுமக்களிடம் பிரபலமடைந்து இருந்தாலும், இருதரப்புகளிடையே இருந்த வேறுபட்ட எதிர்பார்ப்புகள் அமெரிக்காவை கலக்கமடைய செய்தது.
அமெரிக்கா இந்தியாவை பனிப்போர் கொள்கைகளை பின்பற்றுமாறு வலியுறுத்தியது, ஆனால் இந்தியா அதற்கு உடன்படவில்லை.
அமெரிக்காவின் இந்த செயல்பாடு இந்தியா இறையாண்மையை நிராகரிப்பதாக இந்தியா கருதியது.
மேலும் காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாம் தரப்பு தலையீட்டை இந்தியா மறுத்தது, மற்றும் சோவியத் யூனியன் தலைமையிலான கம்யூனிசத்திற்கு எதிராக இந்தியாவை மேற்கத்திய நாடுகளுடன் இணையுமாறு அமெரிக்க வற்புறுத்தியதை அப்போதைய பிரதமர் நேரு நிராகரித்தார்.
இதனால் நேருவின் அமெரிக்க வருகை “ராஜதந்திர இல்லாத பேரழிவு” என்று விவரிக்கப்பட்டது.
1950 முதல் 1970 வரையிலான முரண்பாடு
1950 முதல் 1970 வரையிலான பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நேரடியாக இந்தியாவின் பிராந்திய போட்டியாளரான பாகிஸ்தானை ஆதரித்து, அவற்றிக்கான இராணுவம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கியது.
இதற்கு முக்கிய காரணமாக இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அணி சேரா இயக்கத்தை சந்தேகமுடன் அமெரிக்க பார்த்தது.
இது நேரடியாக மேற்கு நாடுகளின் பனிப் போர் கொள்கைகளுடன் முரணாக இருப்பதாக பார்க்கப்பட்டது.
இதையடுத்து, 1965 முதல் 1971 வரையிலான காலகட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் போரில், அமெரிக்க ஆயுதங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது இந்தியர்களிடையே பெரிய அவநம்பிக்கையை ஏற்படுத்தியது.
1971ம் ஆண்டு வங்கதேச விடுதலை போர்
1971ம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச போர் இந்தியா-அமெரிக்கா உறவில் மிகப்பெரிய அவநம்பிக்கையை உருவாக்கியது.
அகதிகள் நெருக்கடி மற்றும் மூலோபாய காரணங்களுக்காக வங்கதேசம் சார்பில் போரில் இறங்கிய இந்தியாவிற்கு அமெரிக்கா நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
இந்த போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது USS எண்டர்பிரைஸ் விமானம் தாங்கி கப்பலை வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைநிறுத்தியது, இருநாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசலை ஆழப்படுத்தியது.
1998 இந்தியா பொக்ரான் II அணு ஆயுத சோதனை
1998ம் ஆண்டு இந்தியா பொக்ரான் II அணு ஆயுத சோதனையை நடத்திய போது, இந்தியாவின் அணு ஆயுத பெருக்கம் கவலை அளிப்பதாக குறிப்பிட்டு, தொழில்நுட்ப பரிமாற்றம் உட்பட பல்வேறு பொருளாதார தடைகளை இந்தியா மீது அமெரிக்கா அப்போது விதித்தது.
மறுபக்கம், அமெரிக்காவின் அணு ஆயுத திட்டங்களையும், பாகிஸ்தானின் அணு ஆயுத திட்டங்களை கண்டுகொள்ளாமல் விட்டதும் இந்தியாவுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அத்துடன் அமெரிக்காவின் தடைகளை இந்தியா இரட்டை வேடம் என்று சுட்டிக்காட்டியது.
இந்திய அணுசக்தி மற்றும் விண்வெளி ஆராய்ச்சிகளை கண்காணித்தல்
2013ம் ஆண்டு எட்வர்ட் ஸ்னோடன் கசிய விட்ட ஆவணங்களில், இந்தியாவின் அணுசக்தி மற்றும் விண்வெளி திட்டங்களை அமெரிக்க கண்காணித்து வந்தது, இருநாடுகளுக்கு இடையிலான அவநம்பிக்கையை அதிகரித்தது.
இந்த முக்கியமான தருணத்தில் இரு நாடுகளும் தங்களது மூலோபாய மற்றும் பாதுகாப்பு உறவில் ஆழமான ஒப்புதலை மேற்கொண்டு வந்தது குறிப்பிட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |