இறக்கைகள் இருந்தும் பறக்க முடியாத 6 பறவைகள்.., எது தெரியுமா?
இறக்கைகள் இருந்தும் பறக்க இயலாத பறவைகளும் இந்த உலகில் உள்ளன.
இந்த பறவைகள் ஓடுதல், நீந்துதல் போன்ற மற்ற செயல்களுக்காக தங்கள் இறக்கைகளை பயன்படுத்தி கொள்கின்றன.
அந்தவகையில், பறக்க முடியாத 6 பறவைகள் குறித்து பார்க்கலாம்.
1. நெருப்புக்கோழி (Common ostrich)
ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட மிகப்பெரிய பறவை இனம் நெருப்புக்கோழி.
அவற்றின் பெரிய அளவு மற்றும் எடையினால் அவற்றால் பறப்பது சாத்தியமற்றது.
ஆனால் அவற்றின் நீளமான கால்கள் மூலம் இவை மிக வேகமாக ஓடுகின்றன.
2. ஈமு (Emu)
ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட இரண்டாவது மிகப்பெரிய பறவை இனம் ஈமு.
இவை அதிக எடை கொண்ட, பறக்க முடியாத பறவையாகும்.
3. கிவி (Kiwi)
நியூசிலாந்தை பூர்வீகமாகக் கொண்ட கிவிகள், வளர்ச்சியடையாத இறக்கைகள் கொண்ட சிறிய பறவையாகும்.
இதன் இறக்கைகள் அளவில் சிறியவையாக இருப்பதால் கிவி பறவைகளால் பறக்க முடியாது.
4. ககாபோ (Kakapo)
ஆந்தை கிளி என்றும் அழைக்கப்படும் ககாபோ, நியூசிலாந்தை பூர்வீகமாகக் கொண்ட பறவை.
இது பெரிய இறக்கைகள் மற்றும் கனமான உடலைக் கொண்டுள்ளதால் இதனால் பறக்க முடியாது.
5. காசோவரி (Cassowaries)
நியூ கினியா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட காசோவரிகளால் பறக்க இயலாது.
இது சிறிய இறக்கைகள் மற்றும் வலுவான கால்கள் கொண்ட ஒரு பெரிய பறவை ஆகும்.
6. பென்குயின் (Penguins)
குளிர் பிரதேசமான அண்டார்டிகாவை இருப்பிடமாக கொண்ட பென்குயின்களால் பறக்க முடியாது.
தங்களுடைய இறக்கைகளை தன்ணீரில் நீந்துவதற்காக பயன்படுத்துகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |