இந்த 6 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கலாம்.. அலட்சியம் செய்யாதீர்கள்
கொலஸ்ட்ரால் நம் உடலில் அதிகமாக இருக்கின்ற பொழுது நம் தோல்களில் சில மாற்றங்கள் வரலாம் என்றும் அதற்கான ஆறு முக்கியமான அறிகுறிகளை பற்றியும் பார்ப்போம். பொதுவாகவே, ஆரம்ப காலகட்டங்களில் ரத்த கொதிப்பு அதிகரிக்கின்ற பொழுது நமக்கு எந்த ஒரு பிரச்சனைகளும் வருவதில்லை.
அதாவது கடுமையான வலியோ அல்லது உபாதைகளோ ஏற்படாது. அதனால்தான் இதனை மருத்துவர்கள் சைலன்ட் கில்லர் என்று சொல்கின்றனர். அமெரிக்கா இதய சங்கத்தின் கூற்றுப்படி ரத்தத்தில் உள்ள கொழுப்பை கண்டறிவதற்கு நாம் பரிசோதனை செய்வது மட்டுமே முதன்மையானது என்று சொல்கிறார்கள்.
இருப்பினும், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடுகள் மிக தீவிரமாக அதிகரிக்கின்ற பொழுது கண்கள் தோல் மற்றும் கால் போன்ற உறுப்புகளில் சில அறிகுறிகள் வரலாம்.

1.கண்ணிமைகளில் மஞ்சள் திட்டுகள்:
கண்இமைகளை சுற்றி அல்லது கண்களின் மூலையில் மெல்லிய மஞ்சள் நிறத்தில் கொழுப்பு படிவுகள் வரலாம். அதாவது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவிற்கு அதிகமாக மாறும் பொழுது இது தோலுக்கு அடியில் படிந்து இத்தகைய தட்டையான திட்டுகளை உருவாக்குகிறது.
2. கருவிழியை சுற்றிய வளம் வளையம்:
கண்களின் கருவிழி பகுதியை சுற்றி சாம்பல் வெள்ளை அல்லது நீல நிறத்தில் ஒரு மெல்லிய வளையம் ஏற்படலாம். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இது இயல்பான வயது முதிர்ச்சியின் அறிகுறியாகும். ஆனால், 40 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இது தென்பட்டால் அது மரபணு சார்ந்த அதீத கொலஸ்ட்ரால் மற்றும் இளம் வயதிலேயே இதய பாதிப்பை ஏற்படுவதற்கான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
3. தோலில் மெழுகு போன்ற கட்டிகள்:
முழங்கை, முழங்கால் கைகள், பாதங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் ஆரஞ்சு நிறத்தில் சிறிய கொப்பளங்கள் அல்லது கட்டிகள் தென்படும். குறிப்பாக, டிரைகிளிசரைடுகள் மிகவும் ஆபத்தான நிலைக்கு உயரும். அப்பொழுது, உடலில் திடீரென பல கட்டிகள் வரலாம். கட்டுப்படுத்தப்படாத நீரழிவு உள்ளவர்களுக்கு இந்நிலை அதிகம் காணப்படுகிறது.

4. குதிகால் தசைநார் வீக்கம்:
காலில் பின்பகுதி குதிகாலுடன் இணையும் அகில்லெஸ் தசைநாத் அல்லது கைகளில் விரல் நரம்புகளில் கொழுப்பு படிந்து வீக்கம் உண்டாகலாம். இவர்களுக்கு காலணிகள் அணியும் பொழுது அல்லது தொடும்பொழுது இந்த தசை நார்கள் தடிமனாக உணருவது பரம்பரை கொலஸ்ட்ராலின் முக்கிய அறிகுறியாகும்.
5. நடக்கும்போது கால்களில் தசை பிடிப்பு:
பொதுவாக, இரத்தத்தில் கொலஸ்ட்ரால் படிவதால் கால்களுக்கு செல்லும் ரத்த நாளங்கள் சுருங்கி, இரத்த ஓட்டம் தடைபடுகிறது. இவ்வாறான நேரத்தில் சிறிது தூரம் நடக்கும்போது அல்லது மாடிப்படிகளில் ஏறும்போது தொடை மற்றும் கெண்டைக்கால் பகுதியில் தாங்கிக் கொள்ள முடியாத வலி பாரம் அல்லது பிடிப்பு ஏற்படலாம். ஓய்வெடுத்தால் இந்த வலி சற்று குறையும். இவ்வாறான அறிகுறிகள் ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பதற்கான மறைமுக அறிகுறியாகும்.
6. குளிர்ந்த பாதங்கள் மற்றும் மாறாத காயங்கள்:
நம்மை சுற்றி வெப்பநிலை சாதாரணமாக இருந்தாலும் பாதங்கள் எப்பொழுதும் குளிர்ந்து காணப்படும். காலில் ஏற்படும் சிறிய வெட்டு காயங்கள் கூட அல்லது கீரல்கள் கூட நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும். கால்களின் தோல் வெளியே உதிர்ந்து பளபளப்பாக மாறிவிடும்.

யாரெல்லாம் உடனடி பரிசோதனை செய்ய வேண்டும்:
குடும்பத்தில் யாருக்காவது இளம் வயதிலேயே மாரடைப்பு அல்லது அதிக கொலஸ்ட்ரால் வரலாறு இருந்தாலும் அல்லது சர்க்கரை நோய் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உடற்பயிற்சி அற்ற வாழ்க்கை முறை மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நிச்சயமாக உடனடி சோதனை செய்ய வேண்டும்.
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் வழிகள்:
டிரான்ஸ் கொழுப்பு மற்றும் பொறித்த உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்த்து நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ் நட்ஸ், காய்கறிகள் நம் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினசரியாக குறைந்தது நாம் 30 நிமிடங்கள் ஆவது உடற்பயிற்சி செய்வது அவசியம். மருத்துவரின் அறிவுரை படி தவறாமல் மருந்துகள் எடுத்துக் கொள்வதும் இதய பாதிப்பிலிருந்து நாம் நம்மை காத்துக் கொள்ளலாம்.