சுவிட்சர்லாந்தில் பேருந்தில் நிகழ்ந்த பயங்கரம்: ஆறு பேர் பலி
சுவிட்சர்லாந்தில், பேருந்து ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவரின் துணிகரச்செயலால் குறைந்தது ஆறு உயிர்கள் பலியாகியுள்ளன.
பேருந்தில் நிகழ்ந்த பயங்கரம்
சுவிட்சர்லாந்தின் Fribourg மாகாணத்திலுள்ள Kerzers என்னுமிடத்தில், செவ்வாய்க்கிழமை மாலை 6.25 மணியளவில், பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்துள்ளது.

அப்போது, திடீரென எழுந்த ஒரு பயணி, தன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
பேருந்து பயங்கரமாக தீப்பற்றி எரிய, பேருந்தில் பயணித்தவர்களில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.
ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளார்கள். உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் தீவிபத்தை ஏற்படுத்தியவர் என யாருடைய அடையாளங்களையும் பொலிசார் வெளியிடவில்லை.
இந்த பயங்கர சம்பவம் குறித்து சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள சுவிஸ் ஜனாதிபதியான கய் பார்மலின், அந்த சம்பவம் தன்னை கவலையடையச் செய்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தனது இரங்கலையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |