ஐரோப்பிய ஒன்றியத்துடனான நெருங்கிய உறவுகள்: ஆன்டி பர்னாமுக்கு ஆறு பிரதமர்கள் எச்சரிக்கை
Six former PMs warn Andy Burnham against reigniting Brexit battle: பிரெக்சிட் பிரச்சினையை மீண்டும் துவக்குவது தொடர்பில் ஆறு முன்னாள் பிரதமர்கள் ஆன்டி பர்னாமுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான நெருங்கிய உறவுகளுக்கு பிரித்தானிய பிரதமரான ஆன்டி பர்னாம் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, பிரெக்சிட் பிரச்சினையை மீண்டும் துவக்குவது தொடர்பில் ஆறு முன்னாள் பிரதமர்கள் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆன்டி பர்னாமுக்கு ஆறு பிரதமர்கள் எச்சரிக்கை
வரலாற்றுச் சிறப்புமிக்க 2016 வாக்கெடுப்புக்குப் பிறகு பிரஸ்ஸல்ஸுடன் பிரெக்சிட் தொடர்பில் முதல் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த முன்னாள் பிரதமரான தெரசா மே, திரு பர்னாமின் நடவடிக்கைகளைக் கண்டு தாம் பேரதிர்ச்சி அடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
மக்கள் பிரெக்ஸிட்டுக்கு வாக்களித்தார்கள். பிரெக்சிட் முடிந்துவிட்டது. பிரெக்சிட்டை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள் என்பதையே தான் ஆன்டி பர்னாமுக்கு சொல்ல விரும்புவதாக தெரசா மே தெரிவிக்கிறார்.

2016 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பிரதமர் பதவியை ராஜினாமா செய்தவரும், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க விரும்புபவரான டேவிட் கேமரூன், திரு பர்னாம் ஒரு பத்தாண்டு கால விவாதத்தைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
2019ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை பிரித்தானியாவின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனும், பிரெக்சிட் பிரச்சினைக்கு முன்னுரிமை அளிப்பது பைத்தியக்காரத்தனம் என்று கூறியுள்ளார்.

2022ஆம் ஆண்டில் பிரித்தானிய பிரதமர் ஆன லிஸ் ட்ரஸ்ஸும், பிரித்தானியா மீண்டும் பிரஸ்ஸல்ஸின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்குத் தன்னைக் உட்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் சுத்தப் பைத்தியக்காரத்தனம் என்று கூறியுள்ளார்.
2022ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை பிரித்தானிய பிரதமராக இருந்த ரிஷி சுனக், பிரெக்சிட் தொடர்பான மேலதிக விவாதங்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து தான் அஞ்சுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் லேபர் கட்சிப் பிரதமரான டோனி பிளேரும் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் விடயம் குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பத்தில் மேலும் புதுமைகள் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே பிரித்தானியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ஆக, பிரெக்சிட் பிரச்சினையை மீண்டும் துவக்குவது தொடர்பில் ஆறு முன்னாள் பிரதமர்கள் இந்நாள் பிரதமரான ஆன்டி பர்னாமுக்கு அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.