அடர்த்தியாக முடி வளர வேண்டுமா? இந்த 6 உணவுகளை சாப்பிட்டாலே போதும்
பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை என்றாலே அது முடி பிரச்சனைதான்.
உடலில் சரியான ஊட்டச்சத்து இல்லாத காரணத்தினால் முடி உதிர்வு மற்றும் ஆரோக்கியமற்ற முடி உருவாக காரணமாகுகிறது.
அடர்த்தியான கூந்தலுக்கு இந்த 6 உணவுகளை மட்டும் அடிக்கடி உணவில் எடுத்துக்கொள்ளுங்கள்.
பாதாம் மற்றும் ஆளி பாதாம் மற்றும் ஆளி விதைகள் பாதாம் மற்றும் ஆளி விதைகளில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் ஆரோக்கியமான அடர்த்தியான முடியை பெற உதவுகிறது.
பசலைக் கீரை பசலைக் கீரையில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி நிறைந்திருப்பதால் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது முடி உதிர்வதைத் தடுத்து அடர்த்தியான கூந்தலுக்கு உதவுகிறது.
தயிர் தயிரில் உள்ள வைட்டமின் பி5 மற்றும் வைட்டமின் டி முடி ஆரோக்கியத்திற்கு அவசியமானவை மற்றும் முடி உதிர்வதைக் குறைக்க உதவும்.
முட்டை முட்டையில் புரதம், பயோட்டின் மற்றும் ஜிங்க் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிரம்பியுள்ளன. குறிப்பாக பயோட்டின், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, முடி உதிர்வதைத் தடுக்கிறது.
அவகேடோ அவகேடோவில் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் முடி உடைவதைத் தடுக்கும்.
சர்க்கரை வள்ளி கிழங்கு சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டின் ஆரோக்கியமான தலைமுடியை பெற மற்றும் முடி வளர்ச்சியை அதிகரிக்க வைட்டமின் ஏ முக்கியமானது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |