கண்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் 6 உணவுகள் பற்றி தெரியுமா?
மன அழுத்தம், நீண்ட நேரம் போன் பார்ப்பது, தூக்கமின்மை, வயதாவது மற்றும் வேறு சில காரணங்களால் பார்வை திறனில் பிரச்சனை ஏற்படுகிறது.
ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதால் நமது கண் பார்வையும் பலவீனமாகிறது.
ஊட்ட்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதன் மூலம் கண் ஆரோக்கியத்தையும் பலப்படுத்த முடிவதோடு கண்களுக்கு ஏற்படும் நோய்களிலிருந்தும் பாதுகாத்து கொள்ள முடியும்.
என்னென்ன உணவுகள்?
பாதாம் பாதாமில் வைட்டமின் இ அதிகளவில் உள்ளதால் இது நம் கண்களுக்கு நன்மைகளை அள்ளித்தருகின்றது.
இதனால் வயதான காலத்தில் வரும் விழிப்புள்ளி சிதைவு மற்றும் கண்புரை நோய்கள் வராம பாதுகாத்து கொள்ளலாம்.
முட்டை முட்டைகளில் லூடெய்ன் மற்றும் ஜீஜெனாதின் இருப்பதால், வயதான காலத்தில் ஏற்படும் கண் பிரச்சனைகளிலிருந்து இது காக்கிறது.
மேலும் முட்டைகளில் வைட்டமின் C, வைட்டமின் E மற்றும் ஜிங்க் அதிகளவில் இருப்பதால் கண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கிறது.
கேரட் பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ கேரட்டில் அதிகளவு உள்ளதால் கண் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கேரட்டில் இருக்கும் ஊட்டச்சத்துகள் கண்ணின் மேற்பரப்பை பாதுகாத்து, கண் தொற்றுகள் மற்றும் கண் சார்ந்த சில நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
shutterstock
பச்சை காய்கறிகள் கீரைகள், காலே, கோலார்ட்ஸ் போன்ற பச்சை இலை காய்கறிகளில் அதிகளவு லூடெய்ன், ஜீஜெனாதின் மற்றும் வைட்டமின் சி உள்ளது.
இவை அனைத்தும் நம் கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவி செய்கிறது.
மீன் உணவில் மீனை சேர்த்துக் கொள்வதன் மூலம் கண் ஆரோக்கியம் பலப்படும். மீனில் அதிகளவு ஓமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. இது கண் பார்வைக்கு சிறந்ததாகும்.
மேலும் மீன் சாப்பிடுவதால் கண் வறண்டு போவதை தடுக்கிறது. விழித்திரையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு சர்கரை வள்ளிக்கிழங்கிலும் பீட்டா கரோட்டீன் அதிகளவு உள்ளது. இந்த பீட்ட கரோட்டீன் நமது உடலில் உள்ள வைட்டமின் ஏ-யை செயல்பட தூண்டுகிறது.
இது நமது கண் ஆரோக்கியத்திற்கும் கண் செயல்பாட்டிற்கும் முக்கியமானதாகும். சர்க்கரை வள்ளிக்கிழங்கில் கிடைக்கும் ஊட்டச்சத்துகள் மாலைக்கண் நோய் வருவதிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
மேலும் கண்களின் மேற்பரப்பில் இருக்கும் திசுக்களை ஆரோக்கியமாக வைத்து கொள்வதிலும் இது உதவி செய்கிறது.
getty image
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |