சர்க்கரை நோய் உள்ளவர்கள் மறந்தும் கூட சாப்பிடக்கூடாத 6 பழங்கள்: அவசியம் தெரிஞ்சிக்கோங்க
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்களது ஆரோக்கியமான உணவில் ஒரு பகுதியாக பழங்களை சாப்பிடுவது மிகவும் அவசியம்.
பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது இதய நோய் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை குறைக்கலாம்.
பழங்களில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இருப்பினும், சில பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை நிரம்பியுள்ளது.
எனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் குளுக்கோஸ் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள குறிப்பிட்ட பழங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது.
உடலில் சர்க்கரை அளவை பராமரிக்க தவிர்க்க வேண்டிய சில பழங்கள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
என்னென்ன பழங்கள்
1. மாம்பழம்: ஒரு Medium-size மாம்பழத்தில் சுமார் 40 முதல் 45 கிராம் சர்க்கரை உள்ளது.
2. வாழைப்பழம்: ஒரு Medium-size வாழைப்பழத்தில் சுமார் 15 கிராம் சர்க்கரைஉள்ளது.
3.தர்பூசணி: ஒரு Medium-size தர்பூசணியில் 7 கிராம் சர்க்கரை உள்ளது.
4.திராட்சை: ஒரு கப் திராட்சையில் 25 கிராம் சர்க்கரை உள்ளது.
5. உலர்ந்த பேரிச்சம் பழம்: பேரிச்சம் பழத்தில் 4.5 கிராம் சர்க்கரை உள்ளது.
6. அன்னாசி: ஒரு கப் அன்னாசியில் 16.3 கிராம் சர்க்கரை உள்ளது.
மேற்கண்ட பழங்களை குறிப்பாக உணவு வேளைக்கு பிறகு சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.
depositphotos
இதுதவிர, என்னென்ன பழங்களை சாப்பிட்டால் உடலில் சர்க்கரை அளவை உயர்த்தாது என்பதை தெரிந்து கொள்வதும் அவசியம்.
அதன்படி நீரிழிவு நோய் உள்ளவர்கள் அவகேடோ, நாவல் பழம், கிவி பழம், பீச், பேரீச்சம்பழம், பிளம்ஸ் மற்றும் கொய்யா போன்ற பழங்களை உட்கொள்வது அவை இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவும்.
இந்த பழங்கள் அனைத்திலும் சர்க்கரையின் அளவு மிகக் குறைவாக உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் எந்த தயக்கமும் இன்றி உட்கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |