ஒரே மாதத்தில் உடல் எடையை டக்குன்னு குறைக்க இந்த 6 வகை தானியங்கள் போதும்
உடல் எடை அதிகரிப்பு என்பது ஆண் பெண் என இருபாலருக்கும் இடையில் உள்ள ஒரு பொதுவான பிரச்சனையாகும்.
உடல் எடை அதிகரிக்க சரியான உறக்கம் இல்லாதது, தேவையில்லாத நேரத்தில் அதிகளவு உணவு உண்பது, மன அழுத்தம், அதிகளவு மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற பல காரணங்களும் உடல் எடை அதிகரிக்க செய்யும்.
அந்தவகையில் உடல் எடையை குறைக்க உதவும் 6 வகையான தானியங்களை பற்றி விரிவாக காணலாம்.
1. பிரௌன் அரிசி
உடல் எடையை குறைக்க, அரிசி உணவை தவிர்க்க முடியாதவர்கள் இந்த பிரௌன் அரிசியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
பிரௌன் அரிசியில் டயட்டரி ஃபைபர் அதிகம். இது கார்டியோ வாஸ்குலர் நோய்கள் போன்றவை வராமல் தடுக்கும் கவசமாகச் செயல்படும். மேலும், இதை சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசி ஏற்படாமல் தடுக்கப்படும்.
2. ஓட்ஸ்
ஓட்ஸில் உள்ள நார்ச்சத்துக்கள் வயிற்றை முழுமையாக வைத்திருக்கச் செய்வதோடு நீண்ட நேரம் பசியையும் கட்டுப்படுத்தும்.
இதில், கலோரிகளும் மிக மிகக் குறைவு. அதனால் எடை குறைய டயட்டில் இருப்பவர்கள் ஓட்ஸை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
3. பார்லி
நீரிழிவு நோயாளிகள் கூட பார்லியை கஞ்சியாக எடுத்துக் கொள்ளலாம். இதை தினசரி டயட்டில் சேர்த்துக் கொள்ளும்போது உடல் எடை வேகமாகக் குறையும்.
பார்லியில் கலோரிகள் மிக மிகக் குறைவு. அதேபோல உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவி செய்யும்.
4. கினோவா
கினோவாவில் புரோட்டீன், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் பி ஆகியவை நிறைந்திருக்கின்றன.
குளுட்டன் சகிப்புத்தன்மை, செலியாக் நோய் ஆகியவற்றைச் சரிசெய்யும் ஆற்றல் கினோவாவுக்கு உண்டு.
5. ராகி
ராகியில் அதிகப்படியான அளவு கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை நிறைந்திருக்கின்றன. எலும்புகளை இரும்பு போல உறுதியாக்கும் ஆற்றல் ராகியில் உண்டு.
மிகக்குறைந்த கலோரியும் நார்ச்சத்துக்களும் கொண்ட ராகி உடல் எடையைக் குறைக்க பேருதவி செய்யும்.
6. முழு கோதுமை
கோதுமை மாவை விட முழு கோதுமையை அரிசி உணவைப் போல சாதமாக வேகவைத்து சாப்பிடலாம்.
அப்படி சாப்பிடும்போது கோதுமையில் உள்ள நார்ச்சத்துக்கள் முழுமையாகக் கிடக்கும் அது முழுமையான நிறைவாக வைத்திருக்க உதவி செய்யும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |