இதய நோயினை எச்சரிக்கும் முக்கிய அறிகுறிகள்.., என்னென்ன தெரியுமா?
சமீப காலமாக இதய நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மரணமடைந்து வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் இதய நோயால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அந்தவகையில், இதய நோயினை எச்சரிக்கும் முக்கிய உதடு அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

நீல நிற உதடுகள்- இதயம் சரியாக செயல்படாத போது உடலில் இரத்த ஓட்டம் மோசமாக இருக்கும். இது இப்படியே நீடிக்கும் போது அது இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும். எனவே உதடுகளில் இவ்வாறு தோன்றினால் மருத்துவரை அணுகவும்.
வெளுத்த உதடுகள்- இரத்த சோகையால் உடலில் இரத்த ஓட்டம் மோசமாக இருந்தால் உதடுகள் வெளுத்து போகும். இத்துடன் கை, கால்கள் எப்போதும் குளிர்ச்சியாக இருந்தால், மருத்துவரை அணுகவும்.
உதடு வறட்சி- உதடுகளில் தொடர்ந்து வறட்சியும், வெடிப்பும் இருந்தால், உடலில் இரத்த ஓட்டம் மோசமான உள்ளது என்று அர்த்தம். அத்துடன் கால் வீக்கம், உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால், இதய ஆரோக்கியம் மோசமாக உள்ளது என்று அர்த்தம்.
உதடு வீக்கம்- உதடுகள் வீக்கத்தை சந்தித்தால், அது உடலில் நீர் தேக்கத்தின் அறிகுறியாகும். வழக்கமாக இது இதய செயலிழப்பினால் ஏற்படலாம்.
மரத்த உதடுகள்- உதடுகள் மரத்துப்போவது உடலில் இரத்த ஓட்டம் மோசமாக இருந்தால் நிகழும். எனவே உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
ஆறாத புண்கள்- உதடுகளில் புண்கள் ஆறாமல் நீடித்தால் உடலில் இரத்த ஓட்டம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் மோசமாக இருப்பதாக அர்த்தம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |