Blood pressureஐ கட்டுக்குள் வைத்திருக்க உதவும் 6 இயற்கை பானங்கள்
இரத்த நாளங்களில் உள்ள ரத்த அழுத்தம் தேவையை விட அதிகமாக உயர்ந்திருப்பதை இரத்த அழுத்தம் என்று கூறுகிறோம்.
இதைக் கண்டுபிடித்து குணப்படுத்தாமல் விட்டால் இது ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தும்.
பொதுவாக இந்நோய் வெளியே தெரியாது. சில வேளைகளில் மிகப் பெரிய பாதிப்பை அல்லது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய பின் கண்டுபிடிக்கப்படும்.
இந்த இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வீட்டேலேயே தயாரிக்கப்படும் ஆரோக்கியமான இந்த 6 இயற்கை பானங்களை குடிக்கலாம்.
கிரீன் டீ கேடீசின்ஸ் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் க்ரீன் டீயில் நிறைய உள்ளது. இது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.
இஞ்சி டீ இஞ்சி டீயை குடிப்பதால் இரத்த அழுத்தம் குறைவதோடு இதய நலனும் மேம்படும் என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
செம்பருத்தி டீ செம்பருத்தி டீயில் இருக்கும் அந்தோசைனின்ஸ் மற்றும் ஃப்ளாவோனாய்ட் கலவைகள் இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மையை கொண்டுள்ளது.
வெந்தய நீர் வெந்தய நீரில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. இது உங்களின் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும். இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் வெந்தய நீரை குடித்து வந்தால் மிகவும் நல்லது.
மாதுளை ஜூஸ் மாதுளை ஜூஸில் அதிகளவு ஆண்டி ஆக்ஸிடெண்டும் பாலிபீனாலும் உள்ளது. மாதுளை ஜூஸை குடிப்பதால் ரத்த அழுத்தம் குறைகிறது.
சியா விதை ஊறவைத்த நீர் சியா விதைகளில் ஓமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைய உள்ளது. இது உங்களின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும். ஒரு கிளாஸ் நீரில் அரை மணி நேரத்திற்கு சியா விதைகளை ஊற வைத்து அந்த நீரை குடியுங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |