புற்றுநோயை உருவாக்கும் சமயலறையில் இருக்கும் 6 பொருட்கள்: அவசியம் தெரிஞ்சிக்கோங்க
புற்றுநோய் என்றாலே, அனைவருக்கும் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத்தான நோய்தான் நினைவுக்கு வரும்.
உண்மையில், பெரும்பாலான புற்றுநோய்கள் அதிகமாக வளர்ச்சியடைவதற்கு முன்பே கண்டறியப்பட்டால், சிகிச்சையளிக்கப் படக்கூடியவை.
அந்தவகையில், புற்றுநோயை உருவாக்கும் நம் வீட்டின் சமயலறையில் இருக்கும் 6 பொருட்கள் குறித்து பார்க்கலாம்.
நான்ஸ்டிக் பொருட்கள்
நான்ஸ்டிக் பொருட்களில் கோட்டிங்கை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படும் பெர்ஃபுளோரோஆக்டநோயிக் அமிலமானது (PFOA) புற்று நோயுடன் தொடர்புடையது என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சமைக்கும் பொழுது அதிகப்படியான வெப்பநிலைக்கு நான்ஸ்டிக் பொருட்கள் வெளிப்படுத்தும்பொழுது அதிலிருந்து வரும் புகை புற்றுநோய் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.
பிளாஸ்டிக் பொருட்கள்
சமையலறைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கண்டைனர்களை உற்பத்தி செய்ய பிஸ்பினால்A (BPA) என்ற கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது.
இந்த கெமிக்கல் ஹார்மோன் சீர்குலைவை ஏற்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை சமரசம் செய்கிறது.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை
இனிப்புக்காக பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை புற்றுநோய் வளர்ச்சியை ஊக்குவிக்க கூடியதாக அமைகிறது.
இதை அதிகப்படியாக சாப்பிடுவது உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அதிகரிக்கும் என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி
கோலோரெக்டல் புற்றுநோய் குறிப்பாக பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதால் ஏற்படுகிறது.
இறைச்சிகளை பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட்கள் உடலில் நைட்ரோசமைன்களாக மாற்றமடைகின்றன. இதன் காரணமாக புற்றுநோய் உருவாகிறது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
கேன்களில் அடைத்து வரக்கூடிய உணவுகளில் இருக்கக்கூடிய பிஸ்பினால்A (BPA) காரணமாக அது புற்றுநோய் உருவாக்குவதாக செயல்படுகிறது.
கேன்களின் ஓரங்களில் அமைந்திருக்கக் கூடிய BPA உணவுகளில் கலப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த கெமிக்கல் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியதாக அமைகிறது.
அலுமினியம் ஃபாயில்
அலுமினியம் ஃபாயில் பயன்படுத்தி அமிலத்தன்மை நிறைந்த பொருட்களை சமைப்பதினால் அலுமினியம் உணவில் கலப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
நீண்ட நாட்களுக்கு இதுபோல் நம் உடலில் அலுமினியம் சேமிக்கப்படும் பொழுது அது புற்றுநோயை உண்டாக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |