புதுமணத் தம்பதி உட்பட 6 பேர் வெட்டிக்கொலை! நடுநடுங்க வைக்கும் சம்பவம்
இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் கோகுல்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் சந்திர யாதவ், இவருக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர்.
கடந்த 23ம் தேதி 2வது மகனுக்கு கோலாகலமாக திருமணம் நடந்தது, இதனை தொடர்ந்து சொந்தபந்தங்கள், நண்பர்கள் சூழ மணமக்கள் ஊர்வலமாக சென்றனர்.
அன்றைய தினம் குடும்பத்தினர் அனைவருமே ஆட்டம், பாட்டம் என சந்தோஷமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் மூத்த மகனான ஷிவ்வீர், புதுமணமக்கள் சோனு- சோனி, மைத்துனர் ஹவிலியா, இளைய சகோதரர் புல்லன் மற்றும் அவரது நண்பர் தீபக் என 5 பேரையும் சரமாரியாக வெட்டிக் கொன்றார்.
இத்தாக்குதலில் ஷிவ்வீரின் பெற்றோர் மற்றும் மாமாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது, குடும்பத்தினரின் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது வீடே ரத்தமாக கிடந்துள்ளது.
உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, இதற்கிடையே ஷிவ்வீர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
விரைந்து வந்த அதிகாரிகள், இறந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
நொய்டாவில் வேலை செய்து வரும் ஷிவ்வீர், எதற்காக கொலை செய்தார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
அண்ணனே அனைவரையும் சுட்டுக்கொன்றது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |