என் கதையை சொல்ல உலகம் முழுவதும் பயணித்தேன்., 257 நாடுகளை சுற்றிய இசைக்கலைஞர்

Sri Lanka Guinness World Records
By Ragavan Jun 28, 2026 02:36 PM GMT
Report

பெங்களுருவில் பிறந்த இசைக்கலைஞரான பென்னி பிரசாத், தனது வாழ்க்கையின் ஆரம்பத்தில் கடுமையான சவால்களை சந்தித்துள்ளார்.

சிறுவயதிலேயே ஏற்பட்ட ஆஸ்துமா, அதிக அளவு கொர்டிசோன் மருந்துகள், 60 சதவீத நுரையீரல் சேதம், ருமாட்டாய்டு ஆர்திரைடிஸ் ஆகியவை அவரை உடல் ரீதியாக பலவீனமாக்கின.

கல்வியில் தோல்வியடைந்ததால் 'எதற்கும் லாயக்கு இல்லாதவன்' என்று அழைக்கப்பட்ட அவர், 16 வயதில் ஆழ்ந்த மனச்சோர்வில் சிக்கினார்.

அவரது உடல் பிரச்சினைகளால், மருத்துவர்கள் அவரிடம் ஆறு மாதம் மட்டுமே வாழ்வாய் என்று கூறியபோது, தனது வாழ்க்கையே அர்த்தமற்றதாக தோன்றியது.

6-months-to-live-benny-prasad-257-countries-guinnes-record

ஆனால், ஒரு கிறிஸ்தவ இளைஞர் முகாமில் அவர் “இயேசு கிறிஸ்துவின் குரலை” கேட்டதாகக் கூறுகிறார். அது அவரது வாழ்க்கையை மாற்றிய முக்கிய தருணமாக அமைந்தது.

19 வயதில் கிட்டார் கற்றுக்கொண்ட அவர், 1998-இல் இலங்கையில் தனது முதல் இசை நிகழ்ச்சியை நடத்தினார். அதுவே அவரது உலகப் பயணத்தின் தொடக்கம்.

6-months-to-live-benny-prasad-257-countries-guinnes-record

2001-இல், உலகின் அனைத்து நாடுகளையும் சுற்றிப் பார்த்து, இசை மற்றும் நம்பிக்கையின் செய்தியை பகிர வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அந்த கனவு, 2010-இல் உலக சாதனையாக மாறியது. 6 வருடம், 6 மாதம், 22 நாட்களில் உலகின் அனைத்து சுயாட்சி மற்றும் சார்பு நாடுகளையும் சுற்றியவர், “உலகின் வேகமான பயணி” என்ற பட்டத்தை பெற்றார்.

இன்று, அவர் 257 நாடுகள் மற்றும் பிரதேசங்களை சுற்றியுள்ளார். 16 இந்தியப் பாஸ்போர்ட்களில் விசா மற்றும் குடியேற்ற முத்திரைகள் நிரம்பியுள்ளன.

ஆனால், இதனை அவர் சாதனைக்காக செய்யவில்லை என்றும், அல்ல. நான் பயணித்தது பலவிதமான கலாச்சாரங்களை அனுபவிக்கவும், தனது இசையை பகிரவும், தனது கதையை சொல்லவும் தான் உலகம் முழுவதும் பயணித்ததாக கூறுகிறார்.

பயணத்தின் போது, அவர் பல சவால்களை சந்தித்தார். Tuvalu செல்லும் ஒரே விமானம் ரத்து செய்யப்பட்டதால், ஒரு வருடம் காத்திருக்க வேண்டியிருந்தது. Air Senegal சேவையை நிறுத்தியதால், மேற்கு ஆப்பிரிக்க பயணம் சிக்கலானது. விசா சிக்கல்கள், நிதி பிரச்சினைகள், அந்நியர்களின் உதவி, இவை அனைத்தும் அவரது பயணத்தை வித்தியாசமாக்கின.

உலகிலேயே முதல்முறையாக அணு உலை வெப்பத்தில் ஹைட்ரஜன் தயாரிக்கும் இந்தியா

உலகிலேயே முதல்முறையாக அணு உலை வெப்பத்தில் ஹைட்ரஜன் தயாரிக்கும் இந்தியா

பயணம் என்பது பணக்காரர்களுக்கானது மட்டுமல்ல என்றும், அதற்கு திட்டமிடல் தான் முக்கியம் என்கிறார். "நான் அறிமுகமில்லாதவர்களை Facebook-ல் தொடர்பு கொண்டேன். அவர்கள் என்னை தங்கள் வீட்டில் தங்க வைத்தனர். அந்த அனுபவங்கள் மறக்க முடியாதவை.” என்று கூறியுள்ளார்.

பயணத்தின் மூலம் அவர் உலகையும், இந்தியாவையும் புதிய பார்வையில் கண்டதாக கூறினார். “ஒவ்வொரு மாநிலமும் தனித்துவம் கொண்டது. இந்தியா ஒரு கண்டம் போலவே. ஆனால், நம் நாட்டில் குடிமை உணர்வு (Cvic Sense) குறைவாக உள்ளது. போக்குவரத்து விதிகள், வரிசையில் நிற்கும் பழக்கம், பொது இடங்களை மதிக்கும் பண்பு, இவை சிறிய நாடுகளிலும் சிறப்பாக உள்ளது. இந்தியா ஊழல் இல்லாத நாடாக மாற வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

6-months-to-live-benny-prasad-257-countries-guinnes-record

இசை, அவரது பயணத்தின் முக்கிய நூலாக இருந்தது. மொழி தடைகளை தாண்டி, அவரது இன்ஸ்ட்ருமென்டல் இசை உலகம் முழுவதும் மக்களை இணைத்தது. தனது வாழ்க்கை அனுபவங்களை “Unthinkable” என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

இன்று, உலகம் முழுவதும் பயணித்து, நோய்களையும் மனச்சோர்வையும் வென்று, மக்களுக்கு நம்பிக்கையை அளித்தவர், தனது இசை குறித்து ஒரு எளிய விருப்பத்தை மட்டுமே கொண்டுள்ளார். அது என்னவென்றால், “என் இசையை கேட்கும் போது மக்கள் அமைதியை உணர வேண்டும்.” என்பது தான். 

அரிசியிலிருந்து எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா திட்டம்

அரிசியிலிருந்து எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா திட்டம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US