இரத்த வெள்ளத்தில் பழங்குடி இளைஞர்! சிறுநீர் கழித்து துன்புறுத்திய 6 பேர் கைது
இந்தியாவில் பழங்குடியின இளைஞரை அடித்து துன்புறுத்தி சிறுநீர் கழித்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண்ணால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு
ஆந்திரப் பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மோட்டா நவீன் மற்றும் ராமஞ்சனே என்ற அஞ்சி இருவரும் நண்பர்கள்.
ராமஞ்சனேவின் நண்பருக்கு தொடர்புடைய ஒரு பெண்ணின் உறவில் நவீன் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.
நவீன், சிறுமியுடன் தப்பிச் சென்ற பிறகு, அவர் மீது (போக்சோ) சட்டத்தின் விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது, பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இருப்பினும், நவீன் அந்த பெண்ணுடன் தனது தொடர்பைத் தொடர்ந்துள்ளார். இது ராமஞ்சனே மற்றும் அவரது நண்பர்களை கோபப்படுத்தியதால் அவரை துன்புறுத்த திட்டம் தீட்டினர்.
அடித்து, சிறுநீர் கழித்து துன்புறுத்தல்
இதன்படி, ராமஞ்சனே நவீனிடம் நட்பாக பேசி மது அருந்தலாம் என்று கூறியிருக்கிறார்.
பிறகு நண்பர்களுடன் சேர்ந்து ஒன்றாக மது அருந்தியதும், ராமஞ்சனே உள்பட எட்டு பேர் சேர்ந்து நவீனை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
அப்போது முகத்தில் இரத்தம் கசிந்த நிலையில் இருந்த நவீனின் மீது சிறுநீர் கழித்துள்ளனர், இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலானது.
ராமஞ்சனேவுக்கு போலீஸ் வலைவீச்சு
இந்நிலையில், தாக்குதலைத் தொடர்ந்து, மருத்துவ சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நவீன் பொலிசிடம் புகார் அளித்தார்.
பொலிசார் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தியபோது தான் சிறுநீர் கழித்த விவகாரம் தெரியவந்துள்ளது.
நவீன் ஒரு பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த வழக்கில் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பொலிசார் தானாக முன்வந்து செயல்படுத்தியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் ஆறு பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாகியுள்ள ராமஞ்சனேவை பொலிசார் தேடி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |