வானில் 6 கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும் அரிய நிகழ்வு! வெறும் கண்களில் பார்க்கலாமா?
வரும் ஜூன் 3, 4-ம் திகதிகளில் கிழக்கு திசையில் அதிகாலையில் அடிவானில் சூரியனுக்கு மேல் பக்கத்தில் ஒரே வரிசையில் 6 கோள்களையும் பார்க்க முடியும்.
6 கோள்கள்
ஒரு கோளுக்கு அடுத்து இன்னொரு கோள் அடுக்கி வைக்கப்பட்டது போல நம் கண்களுக்கு தெரியும் நிகழ்வு தொடர்வரிசை நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், வரும் ஜூன் 3, 4-ம் திகதிகளில் அதிகாலையில் வியாழன் (Jupiter), புதன் (Mercury), செவ்வாய் (Mars), வருணன் (Uranus), சனி (Saturn), நெப்டியூன் ஆகிய 6 கோள்களை நாம் ஒரே நேர்கோட்டில் பார்க்க முடியும்.
குறிப்பாக கோள்களானது ஒரே நேர்கோட்டில் காணப்பபடவில்லை, அது நேர்கோட்டில் இருப்பதுபோல ஒரு மாயத் தோற்றத்தை நமக்கு தருகிறது.
அதாவது, சூரிய பாதையில் ஒவ்வொரு கோள்களும் வெவ்வேறு தூரம் மற்றும் சாய்வு கோணத்தில் சுற்றி வருகிறது.
இதனால், அவைகள் ஒரே நேர்கோட்டில் அணிவகுப்பதற்கு வாய்ப்பில்லை.அப்படி, ஒரே நேர்கோட்டில் அணிவகுத்து காணக்கூடிய அரிய நிகழ்வு SYZYGY என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு கோள்களும் சூரியனை சுற்றி வருகின்றன. அந்தவகையில், பூமியானது சூரியனை சுற்றிவர 365 நாட்கள் எடுத்துக்கொள்ளும். இதேபோல, ஒவ்வொரு கோள்களும் குறிப்பிட்ட நாட்களில் சுற்றி வருகின்றன.
ஆனால், கோள்களின் சுற்றுவட்டப் பாதையில் ஒன்றை ஒன்று சந்திக்கும் அபூா்வ நிகழ்வுகள் அவ்வப்போது ஏற்படுவது உண்டு.
இந்நிலையில், வரும் ஜூன் 3-ம் திகதி அதிகாலையில் சூரிய உதயத்துக்கு 1 மணி நேரத்துக்கு முன்னர் 6 கோள்களையும் ஒரே நேரத்தில் பார்க்கலாம்.
வியாழன், புதன் மற்றும் வருணன் ஆகிய 3 கோள்களும் சூரியனுக்கு மிக நெருக்கத்தில் இருப்பதால், நாம் தொலைநோக்கி அல்லது பைனாகுலர் பயன்படுத்தி பார்க்கக்கூடாது.
ஏனென்றால், நாம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே சூரியன் உதித்து விடுவதால், அதில் இருந்து புறப்படும் ஒளி பைனாகுலர் அல்லது தொலைநோக்கியால் குவிக்கப்பட்டு, நமது விழித்திரையை பாதிக்கும்.
பின்னர், இரவு நேரத்தில் சனிக்கோள் கும்பம் (Aquarius) விண்மீன்மண்டலத்திலும், வருணன் மீனம் (Pisces) விண்மீன் மண்டலத்திலும், சிறிது நேரத்தில் செவ்வாய் மீனம் (Pisces) விண்மீன் மண்டலத்திலும் காணலாம்.
இதனை நாம் நேரடியாகவோ, பைனாகுலர் மூலமாகவோ இரவில் பார்க்கலாம். அதேபோல, சூரியனுக்கு மிக அருகில் காணப்படும் வருணன், வியாழன், புதன் கோள்களை பைனாகுலர் மற்றும் தொலைநோக்கி மூலம் பார்ப்பதை தவிர்த்து வெறும் கண்களால் பார்ப்பது நல்லது.
அதேபோல யுரேனஸ், நெப்டியூன் கோள்களை பார்ப்பதற்கு தொலைநோக்கி தேவை. அதே சமயம் சூரியன் உதிப்பதற்கு முன்பு இந்த நிகழ்வு நடைபெறுவதால் கவனம் தேவை.
வெறும் கண்களால் நாம் செவ்வாய், சனி கோள்களை பார்க்கும் போது மங்கலாக தெரியும். ஆனால், ஜூன் 3-ம் திகதியில் சனிக்கோளுக்கு கீழேயும், 4-ம் திகதியில் செவ்வாய் கோளுக்கு கீழேயும் சந்திரனையும் காணலாம்.
இந்த மாதிரியான 6 கோள்களின் அணிவகுப்பு மீண்டும் ஆகஸ்ட் 28-ம் திகதி, 2025 ஜனவரி 18, பிப்ரவரி 28, ஆகஸ்ட் 29 ஆகிய நாட்களில் நடைபெறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |