உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் 6 இயற்கை பானங்கள்.., தினமும் காலையில் குடியுங்கள்
உண்ணும் உணவு, பழக்கவழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் நம் உடலில் நல்ல மாற்றங்களை கொடுக்கும்.
குறிப்பாக காலையில் எழுந்தவுடன் குடிக்கும் பானங்கள் உடல்நலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்தவகையில், உடல்நல பிரச்சனைகளை இயற்கையான முறையில் குறைக்க சத்தான 6 காலை பானங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

என்னென்ன பானங்கள்?
தைராய்டு பிரச்சனை- மல்லி நீர் மல்லி விதைகளை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் கொதிக்க வைத்து வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். இது மெட்டபாலிசம் மற்றும் உடல் நலத்தை ஆதரிக்க உதவும்.
ஹார்மோன் சமநிலையின்மை- வெந்தய நீர் வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தோடு குடிக்கவும். இது ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவும்.
சர்க்கரை நோய்- கிராம்பு நீர் கிராம்புகளை கொதிக்க வைத்து வெதுவெதுப்பானதும் குடிக்கவும். இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
இதய ஆரோக்கியம்- பட்டை நீர் பட்டை தூளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும். இது இரத்த ஓட்டம் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு உதவும்.
அஜீரணம்- ஓமம் நீர் ஓமம் மற்றும் சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும். இது செரிமானத்தை மேம்படுத்தி, வயிற்று உப்புசத்தை குறைக்க உதவும்.
மூட்டு வலி- கருஞ்சீரக நீர் கருஞ்சீரகத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் லேசாக கொதிக்க வைத்து குடிக்கவும். இது உடல் வீக்கம் மற்றும் மூட்டு வலியைக் குறைக்க உதவும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |