வீட்டின் பூஜை அறையில் இந்த 6 பொருட்களை வைத்தால் துன்பம் விலகுமாம்!
இந்து கலாச்சாரத்தில் பூஜையறை என்பது ஆன்மீக தன்மை நிறைந்த இடமாக கருதப்படுகிறது.
இங்கு பிரார்த்தனை செய்வதால், வாழ்க்கையில் புனிதமான ஆற்றலையும், அதிர்ஷ்டத்தை ஈர்க்க முடியும் என்றும் நம்புகின்றனர்.
பூஜை அறையின் ஆன்மீக ஆற்றலை அதிகரிக்கவும், வெற்றி மற்றும் செழிப்பை அடையவும் சில முக்கியமான விடயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
1. தீபம்: பூஜையறையில் விளக்கேற்றுவதும், அதை வைத்து வழிபாடு நடத்துவதும் முக்கியமானது என்பதால், தீபம் பூஜையறையில் இருக்க வேண்டும்.
2. ஊதுபத்திகள்: பிரார்த்தனையில் இந்த புகை மிகவும் நல்லது என்று கூறப்படுவதால், ஊதுபத்தி மற்றும் சாம்பிராணி இவை இரண்டும் பூஜையறையில் இருப்பது நல்லது.
3. பிரார்த்தனை மணி: பூஜையின்போது மணியோசை எழுப்புவது புனிதமான சூழ்நிலையை உருவாக்கும்.இந்த சத்தம் எதிர்மறை சக்திகளை விரட்டும் என்று நம்பப்படுகிறது.
4. நீர்: புனித நீர் பூஜையறையை சுத்தீகரித்து, பாதுகாப்பை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது.
5. புனித நூல்கள்: பூஜையறையில் எப்போதும் பகவத் கீதை, ராமாயணம் அல்லது பிற புனித நூல்களை வைத்திருப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
6. தெய்வச் சிலைகள்: தெய்வங்களின் சிலைகளை வைத்து வழிபடுவதன் மூலம், ஆசீர்வாதம், ,செழிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவை குடும்பத்திற்கு கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |