உடலின் உள்ளே அலர்ஜி இருப்பதற்கான முக்கிய அறிகுறிகள்
பொதுவாக உடலின் மேல் ஏற்படும் அலர்ஜியை நாம் பார்த்தே கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.
நமது உடலினுள் ஏதேனும் அழற்சி அல்லது காயம் ஏற்பட்டால், அதை நமக்கு உணர்த்தும் விதமாக நமது உடல் ஒருசில அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
அடிக்கடி சந்திக்கும் உடல் பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் புறக்கணிக்கும் போது, அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மெதுவாக பாதிக்கும்.
இந்த பாதிப்பு, நாள்பட்ட அழற்சியாக மாறி, இதய நோய், டைப்-2 சர்க்கரை நோய் மற்றும் தன்னுடல் தாக்க நோய்கள் போன்ற பல்வேறு தீவிரமான பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடும்.
அந்தவகையில், உடலினுள் அழற்சி அதிகமாக இருந்தால் வெளிப்படும் சில எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.
என்னென்ன அறிகுறிகள்?
நினைவாற்றல் குறைவு, கவனம் செலுத்த முடியாமை மற்றும் மனநிலை மாற்றங்கள் போன்றவை மூளையில் அழற்சி அதிகரித்ததின் அறிகுறிகளாக இருக்கும்.
அதேபோல், வயிற்று உப்புசம், வாய்வு, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற குடல் பிரச்சனைகள் தொடர்ந்து இருந்தால், அது குடல் அழற்சியை குறிக்கும்.
போதுமான ஓய்வு எடுத்தாலும் நீடித்த உடல் சோர்வு இருந்தால், அது நாள்பட்ட அழற்சியின் அறிகுறியாக இருக்கலாம். இதனால் உடலின் ஆற்றல் குறைந்து, பலவீனம் அதிகரிக்கும்.
திடீர் எடை அதிகரிப்பு அல்லது குறைவு ஏற்பட்டாலும் கவனம் அவசியம். அழற்சி காரணமாக ஹார்மோன் மற்றும் மெட்டபாலிசம் பாதிக்கும்.
சருமத்தில் முகப்பரு, அரிப்பு போன்ற பிரச்சனைகள் அதிகரித்தாலும், அது உடலின் உள்ளக சமநிலையின்மையை காட்டுகிறது.
மேலும், மூட்டுகளில் வலி மற்றும் பிடிப்பு இருந்தால், அது அழற்சியுடன் தொடர்புடையதாக இருக்கும். குறிப்பாக ஆர்த்ரிடிஸ் போன்ற நோய்களுக்கு இது ஒரு அறிகுறியாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |