வைட்டமின் B12 குறைபாட்டை எச்சரிக்கும் முக்கிய அறிகுறிகள்.., என்னென்ன தெரியுமா?
வைட்டமின் B12 என்பது இரத்த சிவப்பணுக்கள், டிஎன்ஏ உருவாக்கம் மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்குத் தேவையான உயிர்ச்சத்து ஆகும்.
மனித உடல் இதனைத் தானே உற்பத்தி செய்யாது என்பதால் உணவுகள் மூலம் மட்டுமே பெற வேண்டும்.
உடலில் தேவையான அளவு வைட்டமின் B12 இல்லாத நிலை வைட்டமின் B12 குறைபாடு எனப்படும்.
இது சோர்வு, நரம்பு பலவீனம், கை-கால்களில் கூச்ச உணர்வு மற்றும் இரத்த சோகை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

போதுமான உணவை உட்கொள்ளாமை அல்லது உடல் அதனை உறிஞ்சப் பற்றாக்குமையால் இது உண்டாகிறது.
அதன்படி முட்டை, மீன், இறைச்சி, செறிவூட்டப்பட்ட தானியங்கள், பருவகால பழங்கள் போன்ற வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.
அந்தவகையில், வைட்டமின் B12 குறைபாட்டை எச்சரிக்கும் முக்கிய அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
என்னென்ன அறிகுறிகள்?
உடல் சோர்வு- வைட்டமின் B12 குறைந்தால், இரத்த சிவப்பணுக்கள் குறைவாக உருவாகும். இதனால் உடலுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் அதிக சோர்வு மற்றும் மந்தநிலை ஏற்படும்.
சருமம் வெளிறுதல்- சருமம் வழக்கத்தை விட வெளிறி காணப்பட்டால், அது இரத்தசோகை அல்லது வைட்டமின் B12 குறைபாட்டின் அறிகுறியாக இருக்கும்.
மூச்சுத்திணறல்- வைட்டமின் B12 குறைபாட்டால் உடலுக்கு ஆக்ஸிஜன் விநியோகம் குறைவதால், உடற்பயிற்சி செய்யும்போது அல்லது ஓய்வில் இருக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்படும்.
கை, கால்களில் கூச்ச உணர்வு- கை, கால்களில் மரத்துப்போதல், ஊசி குத்துவது போன்ற உணர்வு அடிக்கடி ஏற்பட்டால், அது நரம்புகளை பாதிக்கும் வைட்டமின் B12 குறைபாட்டின் அறிகுறியாக இருக்கும்.
நடப்பதில் சிரமம்- நரம்பு பாதிப்பால் தள்ளாடி நடப்பது அல்லது நடப்பதில் சிரமம் ஏற்படுவது வைட்டமின் B12 குறைபாட்டால் ஏற்படும்.
மனநிலை மாற்றங்கள்- பதட்டம், எரிச்சல், மனச்சோர்வு போன்ற மனநிலை மாற்றங்களும் வைட்டமின் B12 குறைபாட்டின் அறிகுறிகளாக இருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |