உலகின் கவனத்தை ஈர்த்த 6 வயது சிறுவன் லியோ
லண்டனை சேர்ந்த 12 வயது சிறுவன் Leo Sordello-Savala. சிறு வயது முதலே இயற்கை மீதும் வனவிலங்குகள் மீதும் லியோவுக்கு தீரா காதல்.
இதன் வெளிப்பாடு தான் லியோவின் 6 வயதில் Leo's Animal Planet என்ற யூடியூப் சேனல்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் தொடங்கப்பட்ட இந்த சேனலில் வனவிலங்குகள், அழிந்து வரும் உயிரினங்கள், அவை சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.
I'm loving my new intro for my Youtube channel! More videos coming soon on #zebras, #trophyhunting & the @seashepherd! If you haven't already, please subscribe: https://t.co/yOsvTPtcNv #wildlife #conservation #bantrophyhunting #TiredEarth #StoptheGrind #endangered #ClimateCrisis https://t.co/6qXeHH2OMx
— Leo's Animal Planet 🐬 (@LeosAnimalPlan1) October 12, 2021
வீடியோக்கள் உலகம் முழுவதும் வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது, இதனால் அவருக்கு பல்வேறு விருதுகளும் அங்கீகாரங்களும் கிடைத்தன.
2023ம் ஆண்டு 'International Young Eco-Hero Award' என்ற விருதும், 2024ம் ஆண்டு 'Born Free' அமைப்பின் Junior Ambassador ஆகவும் நியமிக்கப்பட்டார்.
இதுமட்டுமின்றி விதைப்பந்துகள் தயாரித்து விற்பனை செய்வது, பறவைகளுக்கான வாழ்விடங்களை உருவாக்குவது என்பது போன்ற செயல்பாடுகளிலம் ஈடுபட்டு வருகிறார்.
விலங்கு தொண்டு நிறுவனங்கள் மற்றும் காடுகளை மறுசீரமைக்கும் திட்டத்துக்காக தனது பிரசாரங்கள் மற்றும் யூடியூப் வருமானத்தை கொண்டு இதுவரை 13 ஆயிரம் பவுண்டுகள் நிதி திரட்டியுள்ளார்.
சிந்தித்து செயலாற்ற வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் லியோவின் இந்த அசாத்திய சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.