6 வயது சிறுவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்; குலுக்கலில் கிடைத்த ரூ.50 லட்சம் கார்
6 year old won rs.50 lakh fortuner car in lucky draw: 6 வயது சிறுவன் பெயரில் வாங்கப்பட்ட கூப்பனுக்கு, குலுக்கலில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக கிடைத்துள்ளது.
6 வயது சிறுவனுக்கு குலுக்கலில் கிடைத்த ரூ.50 லட்சம் கார்
மத்திய பிரதேச மாநிலம், அபாபுரியில் நடைபெற்ற கர்பா நிகழ்வில் கடந்த ஆண்டு கிரண் ரைக்வார் என்ற பெண் கலந்து கொண்டார்.

அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட அதிர்ஷ்டக் குலுக்கலில், ரூ.200 மதிப்புள்ள கூப்பனை தனது பேரன் மேடன்ஷ் ரைக்வார் பெயரில் வாங்கினார்.
இந்த ஆண்டு அதே இடத்தில் நடைபெற்ற கர்பா நிகழ்விற்கு சென்ற போது, கடந்த ஆண்டு வாங்கிய கூப்பன்களுக்கான குலுக்கல் நடைபெற்றது.

இதில், 6 வயது சிறுவன் மேடன்ஷ் ரைக்வார் பெயரில் வாங்கப்பட்ட கூப்பன் முதல் பரிசை வென்றுள்ளது.
முதல் பரிசாக ரூ.50 லட்சம் மதிப்புள்ள Fortuner கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
ரூ.200 வாங்கிய கூப்பன் இவ்வளவு பெரிய பரிசை கொண்டுவரும் என எதிர்பார்க்காத குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

கார் வென்ற மேடன்ஷுக்கு மேளதாளங்கள் முழங்க, பிரம்மாண்டமான வரவேற்பு அளித்தனர்.