புளோரிடாவில் அதிர்ச்சி சம்பவம்..6 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள சாகச பூங்காவில் 6 வயது சிறுமிக்கு அசாதாரண விபத்தில் உயிரிழந்தார்.
Go-karting
புளோரிடாவின் போர்ட் செயின்ட் லூசி நகரில் சாகச பூங்கா ஒன்று உள்ளது. இங்கு 6 வயது சிறுமி ஒருவர் Go-karting விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். 
அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட, குறித்த சிறுமி பலத்த காயமடைந்துள்ளார்.
பின்னர் அடையாளம் காணப்படாத அந்த சிறுமி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து குறித்த சிறுமி இறந்துவிட்டதாக பூங்கா நிர்வாகம் அறிவித்தது.
மருத்துவ பரிசோதகர் அலுவலகம், அவரது மரணத்திற்கான சரியான காரணத்தை கூற முடிவுகளுக்காக காத்திருக்கிறது. 
இதற்கிடையில், சிறுமிக்கு ஏற்பட்ட காயங்கள் உட்பட சம்பவம் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை. மேலும் விசாரணை நடந்து வருவதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |