அமெரிக்காவில் 6 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்
அமெரிக்காவில் சிறுமி ஒருவருக்கு பால்வினை நோய் இருப்பது குறித்து விசாரணை நடைபெற்றதில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் Arizona பகுதியில் 6 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக அந்த சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு பால்வினை இருப்பதாக தெரிவித்தனர்.இந்த செய்தியை கேட்டு பயங்கர அதிர்ச்சி அடைந்த சிறுமி பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் விசாரணையை சிறுமியிடம் இருந்து தொடங்கினர். அப்போது தன்னுடைய தந்தையுடன் ஒரே அறையில் வசித்து வந்த அவருடைய நண்பர் அச்சிறுமியிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறியுள்ளார்.
அவர் கூறியதை வைத்து காவல்துறையினர் Jacob Sullivan(26) என்ற நபரை தேடி கைது செய்துள்ளனர்.
இதையடுத்து அந்த நபர் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் சிறுமியின் குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.