பிரான்சில் 60,000 புலம்பெயர்ந்தோர் குடியிருப்பு அனுமதி இழக்கும் அபாயம்: என்ன காரணம்?
பிரான்ஸ் அறிமுகம் செய்துள்ள புதிய புலம்பெயர்தல் விதி ஒன்றினால், பிரான்சில் வாழும் புலம்பெயர்ந்தோர் பலர் குடியிருப்பு அனுமதி இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
60,000 பேருக்கு பாதிப்பு
பிரான்ஸ் கொண்டுவர இருக்கும் அந்த விதியால், 60,000 புலம்பெயர்ந்தோர் வரை பாதிக்கப்பட இருப்பதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
20,000 புலம்பெயர்ந்தோர் தங்கள் குடியிருப்பு அனுமதியை இழக்கலாம் என்றும், 40,000 பேரின் குடியிருப்பு அட்டை நிராகரிக்கப்படலாம் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அது என்ன விதி?
அதாவது, 2024ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், பிரான்சில் புதிய மொழிக்கட்டுப்பாடு குறித்த அறிவிப்புகள் வெளியாகின.
ஆனால், அவை இன்னமும் அதிகாரப்பூர்வமாக அமுல் செய்யபடவில்லை.
அவை அமுலுக்குவரும் பட்சத்தில், 60,000 புலம்பெயர்ந்தோர் வரை பாதிப்புக்குள்ளாகலாம் என்கிறது பிரான்ஸ் உள்துறை அமைச்சகம்.
அந்த விதிகளின்படி, 2 முதல் 4 ஆண்டுகளுக்கான குடியிருப்பு அட்டை பெறவிரும்பும் வெளிநாட்டவர்கள், நடுநிலைப்பள்ளி மட்டத்தில் பிரெஞ்சு மொழி பேசத் தெரிந்தவர்கள் என்பதை நிரூபிக்கவேண்டியிருக்கும்.
10 வருட குடியிருப்பு அட்டை பெறவிரும்பும் வெளிநாட்டவர்களோ, உயர்நிலைப்பள்ளி மட்டத்தில் பிரெஞ்சு மொழியை சரளமாக பேசுபவர்கள் என்பதை நிரூபிக்கவேண்டியிருக்கும்.
பிரெஞ்சுக் குடியுரிமை பெற விரும்புபவர்கள், பல்கலை மட்டத்தில் பிரெஞ்சு மொழியை சரளமாக பேசுபவர்கள் என்பதை நிரூபிக்கவேண்டியிருக்கும்.
ஆக, பிரெஞ்சு மொழித் தகுதி பெறாதவர்கள், குடியிருப்பு அனுமதி பெறவோ, பிரான்சில் வாழவோ, வேலை செய்யவோ முடியாது என்பதால், ஏராளமான புலம்பெயர்ந்தோர் பாதிப்புக்குள்ளாக இருக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |