30 மணி நேரம் கடலில்... 60 புலம்பெயர்வோரை மீட்ட பிரித்தானியா
About 60 migrants taken to Dover after more than 30 hours at sea: சுமார் 60 புலம்பெயர்வோர் 30 மணி நேரம் கடலில் செலவிட்ட நிலையில், அவர்கள் டோவர் துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
30 மணி நேரம் கடலில் செலவிட்ட சுமார் 60 புலம்பெயர்வோர் பிரித்தானிய எல்லை பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளார்கள்.
30 மணி நேரம் கடலில்...
திங்கட்கிழமையன்று பிரான்சிலுள்ள நார்மண்டியிலிருந்து சுமார் 60 புலம்பெயர்வோருடன் படகொன்று புறப்பட்டுள்ளது.

அந்த படகிலிருந்தவர்கள், பிரித்தானியாவை சென்றடைவதற்கு எந்த ஆபத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக தெரிவித்ததால் அவர்களை தாங்கள் தடுக்கவில்லை என்று கூறியுள்ள பிரெஞ்சு கடலோரக் காவல் படை, அது குறித்து பிரித்தானியாவுக்கு தகவல் கொடுத்துள்ளது.
அந்த புலம்பெயர்வோர் 33 மணி நேரத்துக்கும் அதிகமாக கடலில் செலவிட்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவிக்க, பிரித்தானிய கடலோரக் காவல் படை, அவர்களை மீட்க உதவுமாறு RNLI தொண்டு நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
செவ்வாய்க்கிழ்மை 11.00 மணியாளவில் RNLI படகுகள் அந்த புலம்பெயர்வோரை மீட்க, அங்கு வந்த பிரித்தானிய எல்லை பாதுகாப்புப் படையினர், அவர்களை அங்கிருந்து அழைத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார்கள்.

இதற்கிடையில், சுமார் 60 புலம்பெயர்வோர் Gosport துறைமுகத்துக்கு வருவதாக தகவல் பரவ, செவ்வாய்க்கிழமை மாலை, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹாம்ப்ஷையர் நகரில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்நிலையில், அந்த 60 புலம்பெயர்வோரும் டோவர் துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாக Gosport நாடாளுமன்ற உறுப்பினரான Dame Caroline தெரிவித்துள்ளார்.

விடயம் என்னவென்றால், அந்த புலம்பெயர்வோர் Vierville-sur-Mer என்னுமிடத்திலிருந்து படகில் புறப்பட்டுள்ளார்கள்.
அதாவது, அவ்வளவு தொலைவிலிருந்து புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குப் புறப்படுவது அபூர்வம் என்கின்றன பிரித்தானிய ஊடகங்கள்!